website loader
×

50 ஆண்டுகள் கடந்த நம் திருமங்கலம் மீனாட்சி திரையரங்கு

திருமங்கலம் : திருமங்கலம் மீனாட்சி திரையரங்கிற்கும் தமக்கும் உண்டான பிணைப்பை முகநூல் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார் திருமங்கலத்துப் புரவலர் திரு. அ. தமிழ்ச் செல்வன் அவர்கள்

எங்கள் ஊர் மீனாட்சி தியோட்டருக்கு வயது 50

மதுரை திருமங்கலம் மீனாட்சி தியோட்டர் தனது 50 வயதை தொட்டிருக்கிறது. இந்த தியோட்டரின் வயதில் 40 வருடங்களாவது தொடர்ந்து சினிமா பார்வர்களின் நானும் ஒருவன். வாரம் ஒரு சினிமா பார்க்கும் சினிமா ரசிகன் நான். டிக்கெட் எடுக்க சட்டை கசங்கி,சில சமயங்களில் கிழிந்து போகுமளவுக்கு கூட்டம் இருந்த காலம் உண்டு. தியோட்டரில் விசில் சத்தம் காதை பிளக்கும் அளவுக்கு கொண்டாடமாக இருக்கும். இன்றைக்கு காலை காட்சிக்கு 20 பேர் என்பது அதிகம். அதிலும் பெண்கள் தியோட்டருக்கு வருவது இல்லை.சில சமயங்களில் கூட்டம் இல்லாமல் காலை காட்சி ரத்தானதும் உண்டு. மாதம் ஒரு முறை மீனாட்சி தியோட்டருக்கு செல்வதால் டிக்கெட் கொடுப்பவர்,கிழிப்பவரில் இருந்து நண்பர்களாகி போனார்கள்.வாங்க தலைவா என்று கூப்பிடும் அளவுக்கு பழக்கம்.

இன்றைக்கு இருக்கும் திருட்டு சீ.டி உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு நடுவே 50 வருடங்களை கடந்திருக்கிறது மீனாட்சி தியோட்டர்.



Tirumangalam Thiru.A. Tamil Selvan expressed his feelings about Tirumangalam Meenatchi Theatre
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top