website loader
×

சிவரக்கோட்டை - ஆபத்தின் விளிம்பில் திருமங்கலத்தின் சிறு தானிய களஞ்சியம்

திருமங்கலம்: திருமங்கலம் வட்டம் சிவரக்கோட்டை கிராமம் சிறுதானியங்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று சிறுதானிய களஞ்சியமாக திகழ்கிறது. ஆனால் அதற்கு பெரும் ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது.

சிவரக்கோட்டை – கரிசல்காளாம்பட்டி எல்லையில் 15 ஏக்கர் பரப்பளவில் வற்றாத நீரூற்று கொண்ட மலையூரணி அமைந்துள்ளது. அதன்மேல் அமைந்துள்ள சென்றாயப் பெருமாள் கோயில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. அதன் அடையாளமாக மீன் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே பாம்பு புற்றுகளில் வழிபட, சேவல் பலிகொடுத்து பொங்கலிட்டு சிறப்பு பூசைகள் செய்கின்றனர். அதன் அருகே பாண்டிய மன்னர் காலத்தில் யானைகளை குளிப்பாட்டுவதற்கு ஒரு தெப்பமும், குதிரைகளை குளிப்பாட்டுவதற்கு மற்றொரு தெப்பமும் உள்ளது. மேலும் பண்டைய காலம் தொட்டு இன்று வரை பாண்டிய மன்னர் தோண்டிய ஒரு கிணறும் வற்றாமல் உள்ளது. 1974ம் ஆண்டு மதுரை மாவட்ட பஞ்சத்தின் போது, திருமங்கலம், கள்ளிக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு இங்கிருந்து தண்ணீர் கொண்டு தான் பஞ்சம் தீர்க்கப்பட்டது.

இந்த ஊரணியைச் சுற்றிலும் கண்ணில் படும் தூரமெல்லாம் ஏறத்தாழ 70 வகையான தானியங்கள் விளைய வைக்க கூடிய கரிசக்காடு. இன்றும் திணை, துவரை, வரகு, உளுந்து, கம்பு, பாசிப்பயறு, கேழ்வரகு, தட்டைப்பயறு, குதிரைவாலி, மொச்சை, சோளம், கொள்ளு, மக்காச்சோளம், சுண்டல், சாமை, வெண்டி, மல்லி, கொத்தவரை, எள், மொச்சைக்காய், ஆமணக்கு, பீர்க்கை, ஓமம், பருத்தி, அவுரி, வேம்பு, நித்யகல்யாணி, புளி என 30க்கும் மேற்பட்ட வகையான பயிர்கள் ரசாயன உரமில்லாமல் பயிரிடப்படுகின்றன. இந்நிலையில் கடந்த 2009ம் ஆண்டு திமுக அரசு, கிட்டத்தட்ட 4000 ஏக்கர் விவசாய நிலப்பரப்பை தரிசு நிலம் எனக் கூறி விவசாயிகளிடம் அபகரித்து சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்க ஆணையிட்டது. இன்றைய அரசும் இதற்கு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது குறித்து ஊர் பெரியவர் இராமலிங்கம் அவர்கள் கூறியதாவது, இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் நீர் இருக்கும் விவசாய நிலங்களையே குறி வைக்கின்றனர் இதற்கு அரசும் உடந்தை. நிலத்தை இவர்களிடம் கொடுத்த விட்டு விவசாயிகள் என்ன செய்வர்? வேலை கூட கொடுக்க மாட்டான். படிக்காதவன் எனக்கூறி அவன் கம்பெனியில் அதிகபட்சமாக காவல் காக்கும் வேலையும், கழிவறை கழுவும் வேலையும் கிடைக்கும்.

நீர்நிலை குறித்தான தவறான தகவல்கள் வெளியிடுதல் என ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் முரண்பட்டு செயல்படுகின்றனர். இதனால் எதனை சாதிக்கப் போகிறார்கள் என்பதற்கு “சிப்காட்” (SIPCOT) அதாவது சிறப்பு பொருளாதார மண்டலம். மக்களின் வாழ்வாதாரத்தினை, நீர்நிலைகளை, வேளாண்மையை, பல்லுயிர்களை, தொல்லியல் சின்னங்களை அழித்து விட்டு யாருக்கு இந்த சிறப்பான பொருளாதார மண்டலம் என்பது தான் நமக்குள் எழும் கேள்வி. இந்நிலை மாற வேண்டும். விழித்தெழுங்கள் மக்களே!

Sivarakottai's wealthy farm land is going to be a rustic sipcotதொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top