website loader
×

கக்கன் காலனி ஓடையில் நெகிழியை அகற்ற கருத்து பரிமாற்றக் கூட்டம்

திருமங்கலம் : நாளை கக்கன் காலனி ஓடையில் தேங்கும் நெகிழியை அகற்றுவது குறித்து கருத்து பரிமாற்றக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து சித்தர்கூடம் அறக்கட்டளை திருமங்கலம் களப்பணி நண்பர்களின் களப்பணியின் சார்பில் திரு. சோம்நாத் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை "திருமங்கலம் அண்ணாநகர் பகுதியில் கடந்த (16/10/2016 ) ஞாயிறன்று நடைபெற்ற களப்பணியின் போது அப்பகுதியில் உள்ள அன்றைய ஆறு இன்றைய ஓடையில் நெகிழிக் குப்பைகள் அதிகளவில் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் அந்த ஆற்றில் கழிவு நீரும் கலப்பதால் கொசு தொல்லையில் அப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்பு அடைகின்றனர். இதே நிலை நீடித்தால் அப்பகுதி மக்கள் மட்டுமல்லாது நம் நகரின் சுற்று சூழலே மாசுபடும் அபாயம் உள்ளது. நம் நகரின் பாரம்பரியமிக்க இந்த ஆறு கூவம் ஆறாக மாறிடும் நிலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த சீர்கேட்டை சரி செய்வது யார்? இதனை சரி செய்ய வழி என்ன? இப்படி பல குழப்பங்களுக்கு நடுவில் இச்சீர்கேட்டை சரி செய்யும் நோக்கில் சித்தர்கூடம் அறக்கட்டளை களமிறங்க உள்ளது. அதற்குண்டான கருத்து பரிமாற்றக்கூட்டம் வரும் ஞாயிற்றுக் கிழமை (23/10/2016)அன்று நடைபெற உள்ளது"
நேரம்: காலை 7 மணி முதல் 9 மணி வரை
இடம்: அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (போர்டைஸ்கூல்) மைதானம்
மேலும் தகவல்களுக்கு:
த.சோம்நாத்: 9629435760
முத்துப்பிரபு பெரியகாத்தா: 9976579196

நம் திருமங்கலத்தின் நலன் காக்க தன்னார்வலர்கள் களமிரங்க வேண்டுகிறோம்.

Tirumangalam Sitthar Koodam organize a meeting to consult the status of Kakkan Colony canal tomorrow

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top