website loader
×

கக்கன் காலனி ஓடை கரையில் வலுவிழந்து நிற்கும் மின் கம்பம்

திருமங்கலம் : திருமங்கலம் கக்கன் காலனி காய்வாயில், பல மாதங்களாக மின்கம்பம் தள்ளாடி கொண்டிருப்பதால், அப்பகுதி மக்கள் இருள் சூழ்ந்து அச்சத்தில் உள்ளனர். ஓமியோபதி கல்லுாரியில் துவங்கும் கக்கன் காலனி கால்வாய் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வழியாக வடகரையை அடைகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளம் ஏற்பட்டபோது, இக்கால்வாயை ஒட்டியுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால், 2 ஆண்டுகளுக்கு முன் இருபுறமும் தடுப்பு கொண்ட கால்வாய் அமைக்கும் பணி துவங்கியது. தற்போது வரை பணி முடிவடையவில்லை.

அரசு பள்ளி எதிரே மட்டும் முழுவதும் பாலம் அமைத்து நீர் வெளியேற ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் பள்ளி, எஸ்.எஸ்.ஐ., அலுவலகம், அரசு பள்ளி விடுதி என பல கட்டடங்கள் பள்ளத்திற்கு சென்றன. இதனை அடுத்துள்ள பாலங்களில், முறையாக தடுப்பு ஏற்படுத்தாமல், மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ராமச்சந்திரா தடாக தெருவிற்கு செல்லும் மின்கம்பம் கால்வாயின் நடுவே பல மாதங்களாக தள்ளாடி கொண்டிருக்கிறது. இதனால் அடிக்கடி இப்பகுதியே இருளில் சூழும் நிலை உள்ளது. இதனால் திருட்டுகள் அடிக்கடி நடப்பதற்கு இதுவும் காரணமாக உள்ளது என்கின்றனர் மக்கள்.

செல்வம்: கால்வாய் பணிகள் தொடங்கி ஆண்டுகள் பல ஆகியும், இன்னும் பணிகள் முடிந்தபாடில்லை. இந்த மின்கம்பம் சமீபத்தில் பெய்த மழைக்கு பயங்கரமாக ஆட்டம் கொடுக்கிறது. எப்போது விழும் என தெரியவில்லை. சம்பந்தபட்ட அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பெரும்விபத்து ஏற்படாமல் இருக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.
செய்தி: தினமலர்

An electric post to be removed from Kakkan colony canal as it is weak stand.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top