website loader
×

கப்பலூர் சுற்றுச்சாலையை 4 வழிச்சாலையாக்கக் கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு

திருமங்கலம் : கப்பலூர் சுற்றுச்சாலையை நான்கு வழிச்சாலையாக்கக் கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு

கப்பலூர் சுற்றுச்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மேலூர், ராமநாதபுரம், சிவகங்கை, நெடுங்குளம், அருப்புக்கோட்டை, கன்னியாகுமரி நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில், 27.2 கி.மீ.,க்கு அமைக்கப்பட்ட மதுரை சுற்றுச்சாலை, இருவழிச்சாலையாக உள்ளது. இதனை நான்கு வழிச்சாலையாக மாற்ற, கடந்த 2014ல் நான்குவழிச்சாலையாக்க 200கோடி ரூபாயை ஒதுக்கினார் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா. ஆனால் பணிகள் இன்று வரை ஆரம்பிக்கப்படாமல் சேதமான சாலையை ஒட்டுபோடும் பணிகள் தான் நடந்து வருகிறது. தரமற்ற சாலையினால் அதிக விபத்துகள் நடக்கின்றன. அதனாலேயே இச்சாலை, தமிழகத்தின் பாதுகாப்பற்ற சாலைகளுள் ஒன்றாக மாறியுள்ளது.

நான்குவழிச்சாலையாக மாற்ற திருப்பரங்குன்றத்தை சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்தார். இச்சாலையின் பராமரிப்பில், மாநகராட்சி அலட்சியம் காட்டுவதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வந்தது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் நிர்வாக பொரியாளருக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில், தேசிய நெடுஞ்சாலைத்துறையையும் சேர்க்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tirupparankundram lawyer filed a petition in Madurai High Court to upgrade Kappalur Ringroad to four way lane.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top