website loader
×

பராமரிப்பு இல்லாததால் உறுதியிழக்கும் கப்பலூர் சுற்றுச்சாலை பாலம்

திருமங்கலம் : முறையான பராமரிப்பு இல்லாததால் கேள்விக்குறியாகும் கப்பலூர் மேம்பாலத்தின் உறுதித்தன்மை

தென்மாவட்டங்களில் இருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு செல்ல, உத்தங்குடியில் இருந்து கப்பலூர் வரையில் 27கி.மீ தூரத்திற்கு சுற்றுச்சாலை அமைக்கப் பட்டது. இச்சாலயை மாநகராட்சி முறையாக பராமரிக்கவில்லை. கப்பலூரில் தண்டவாளத்தை கடக்க, சுற்றுச்சாலை தொடங்கும் இடத்தில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் தோப்பூரில் இருந்து திருமங்கலம் வரை நான்கு வழிச்சாலையில் அகலமாகவும். மாட்டுத்தாவணிக்கு செல்லும் சுற்றுச்சாலை பிரிவில், அகலத்தை குறைத்து ஒற்றைச் சாலைக்கு ஏற்ப அமைக்கப்பட்டது. இந்நிலையில் சுற்றுச்சாலை பகுதியில் செல்லும் பாலத்தின் அடிப்பகுதியில் செடி, கொடி வளர்ந்துள்ளன. இதனால், பாலத்தின் அடிப்பகுதியின் உறுதித்தன்மை பாதிக்கப்படும் நிலை உண்டாகியுள்ளது. அதிக வாகனங்கள் செல்லும் இப்பாலத்தை பராமரிக்க, மாநகராட்சியும் நெடுஞ்சாலைத்துறையும் கண்டுகொள்வதில்லை.

பாலத்தின் மேற்புறம் உள்ள சாலையும் குண்டும் குழியுமாக இருப்பதால், வாகனங்கள் செல்லும் போது அதிர்வுகள் உண்டாகின்றன. எனவே, பாலத்தை பராமரிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி & படம்: தினகரன்

Kappalur Ringroad bridge is likely to be a caution for drivers passing the bridge

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top