website loader
×

சார்பு நீதிமன்றமாகும் திருமங்கலம் பழைய தாலுகா அலுவலகம்

திருமங்கலம் :நீண்ட நாள் கோரிக்கையான திருமங்கலம் சார்பு நீதிமன்றம் பழைய தாலுகா அலுவலகத்திற்கு இடமாற்றம்

திருமங்கலத்தில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தாலுகா அலுவலக வளாகம் உள்ளது. நூற்றாண்டு கண்ட இதன் வளாகத்தில் முன்சீப் கோர்ட், மாஜிஸ்திரேட்கோர்ட், கிளை சிறை, கருவூலம் என பல அரசுத் துறைகள் ஒருங்கே இயங்கி வருகின்றன. இதில் முனிசீப் கோர்ட் கட்டிடத்தின் ஒரு பகுதியில் சப்கோர்ட் அமைந்துள்ளது. நீண்டகாலமாக வாரம் ஒருமுறை மட்டும் இயங்கி வந்த இந்த கோர்ட் தற்போது முழுநேர கோர்ட்டாக மாற்றப்பட்டு செயல்படுகிறது. இடப்பற்றாக்குறையால் இங்கு பல்வேறு சிரமங்கள் எழுந்தன. இதனால் சப்கோர்ட்டிற்கு தனி கட்டிடம் தேவை என வக்கீல்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தாலுகா அலுவலகத்திற்கு கடந்த ஆண்டு புதிய கட்டிடம் கட்டி முடித்து திறக்கப்பட்டது. அதன் பின்னர் பழைய தாலுகா அலுவலகம் தேர்தல் ஆவணங்களை பராமரிக்கும் இடமாக மாற்றப்பட்டு பெயரளவில் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடத்தை சப்கோர்ட்டாக மாற்ற வேண்டும் என திருமங்கலம் வக்கீல்கள் சங்கம் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாலுகா அலுவலகத்தை ஆய்வு செய்ய வந்த கலெக்டரிடம் வக்கீல் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந் நிலையில் அந்த கட்டிடத்தை கோர்ட்டுக்கு ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன் படி உரிமையியல் நீதிபதி ஸ்ரீவித்யாவிடம் திருமங்கலம் தாசில்தார் மலர்விழி அந்த அலுவலக கட்டிடத்திற்குரிய சாவியை ஒப்படைத்தார். இதனையடுத்து ஒப்படைக்கப்பட்ட அந்த இடத்தில் விரைவில் சப்கோர்ட் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தி: தினகரன்

Tirumangalam old Taluk office building ready for Tirumangalam Subcourt

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top