website loader
×

பொன்னமங்கலத்தில் தீவிரமடையும் மர்ம காய்ச்சல் - மக்கள் அச்சம்

திருமங்கலம்: திருமங்கலம், பொன்னமங்கலத்தில் வேகமாக பரவிவரும் மர்ம காய்ச்சலால் ஏராளமானோர் பாதிப்பு

திருமங்கலம் அருகேயுள்ள பொன்னமங்கலத்தில் கடந்த சில நாட்களாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் ஏராளமானோர் பாதிப்படைந்துள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் சாத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திலும், திருமங்கலம் அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் தீவிரமடைந்ததையடுத்து, பொன்னமங்கலத்தில் மருத்துவர்கள் குழு முகாமிட்டுள்ளனர்

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் வலி மற்றும் கால் வலி இருப்பதாகவும், எழுந்து நடக்கக்கூட முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர். சாத்தங்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கூறுகையில் "இங்குள்ளவர்களுள் ஏராளமானோர் கேரளத்தில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களின் மூலம் பரவி இருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரியை எடுத்து ஆய்விற்கு அனுப்பியுள்ளோம்." என்று கூறினர். மேலும் பொது மக்கள், குடிதண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

Ponnamangalam village people near Tirumangalam suffered from an unknown fever for the past few days. Doctors camped there in Ponnamangalam to take necessary steps to prevent the fever.
செய்தி: தினகரன், தினமலர்

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top