website loader
×

குண்டாற்றில் தொடர்ந்து நெகிழியை எரிப்பதால் உண்டாகும் காற்று மாசு

திருமங்கலம் :குண்டாற்றில் எரிக்கப்படும் நெகிழியின் நச்சுப்புகையால் காற்று மாசு அபாயம் கண்டுகொள்ளுமா நகராட்சி நிர்வாகம்?

திருமங்கலம் நகரை ஒட்டி குண்டாறு உள்ளது. இந்த ஆற்றில், கடந்த 2 ஆண்டிற்கு முன்பு பொதுப்பணித்துறை சார்பில் சாத்தங்குடி முதல் ஆறுகண்பாலம் தாண்டி தூர்வாரப்பட்டது. இந்தநிலையில் தெற்குதெரு அருகே மயானம் செல்லும் வழியில் உள்ள குண்டாற்றில் நெகிழி உட்பட அனைத்து கழிவுகளையும் மாலை, இரவு நேரங்களில் கொட்டி அடிக்கடி தீவைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று பகல் நேரத்தில் யாரோ சிலர் குண்டற்றில் நெகிழிக்கழிவுகள் மற்றும் பழைய குழல் விளக்குகள் ஆகியவற்றுடன், கழிவு தாளையும் சேர்த்து தீயிட்டுச் சென்று விட்டனர். அதில் இருந்து கிளம்பிய நச்சுப்புகை அப்பகுதி முழுவதும் பரவி, புகை மூட்டமாக காணப்பட்டு வருகிறது. சுமார் ஒரு கிமீ தூரத்திற்கு அப்பால் புகை மண்டலமாக காணப்படுவதால், அதில் இருந்து கிளம்பும் நச்சுப்புகை காற்றில் கலந்து வருகிறது.

மாசு ஏற்படும் அபாயம்
காற்று வேகமாக அடிக்கும் போது, அனைத்து திசைகளிலும் புகை பரவி செல்கிறது. திருமங்கலம் நகரின் மேற்கு மற்றும் தென்பகுதி முழுவதும் இந்த புகை பரவுவதால், இதை சுவாசிக்கும் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அளவு பாதிப்படைய வாய்ப்பு இருப்பதாகவும், இதனை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த நச்சுப்புகை காற்றில் கலந்து வருவதால், காற்று மாசுபட்டு, பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயநிலை உருவாகி வருவதாகவும் அவர்கள் கூறினர்.

மேலும் ஆற்றுக்குள் கழிவுகள் எரிக்கப்படுவதை அதிகாரிகள் தடுக்கவேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஆறு, குளம் தூர்வாருதல், சுத்தப்படுத்துதல் போன்ற பணிகள் நகர் மற்றும் கிராமங்களில் பல்வேறு திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆறுகள் மூலம் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் தேவையற்ற கழிவுகளை எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
படம் & செய்தி: தினத்தந்தி

Some anti-social people sets fire on plastic garbages and waste on Gundaar river.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top