website loader
×

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 30ம் நாள் அமைதி ஊர்வலம்

திருமங்கலம் :மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக திருமங்கலம் அதிமுகவினர் அமைதி ஊர்வலம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த டிச.8ம் நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதிலிருந்தும் அனுதாபங்கள் குவிந்தன. இந்நிலையில் ஜெயலலிதா இறந்து 30ம் நாளையொட்டி திருமங்கலம் அதிமுகவினர் ஜெயலலிதாவின் ஆத்மா அமைதி அடைய நகரின் முக்கிய வீதிகளில் இன்று ஊர்வலமாக சென்றனர். இன்று காலை 9:00 மணியளவில் திருமங்கலம் சந்தைப்பேட்டையில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் உசிலைச் சாலை, மதுரைச் சாலை என இறுதியில் இராசாசி சிலை அருகே நிறைவுற்றது. இதில் அஇஅதிமுக மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் vv.இராஜன் செல்லாப்பா, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் தமிழக வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், திருமங்கலம் அஇஅதிமுக நகரச் செயலாளர் விஜயன், திருமங்கலம் தொகுதி முன்னாள் உறுப்பினர் ம.முத்துராமலிங்கம் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்
படம் & செய்தி: ஜெய் முகேஷ்

Tirumangalam AIADMK cadres permormed 30th day mourn march in the streets of Tirumangalam






தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top