website loader
×

தடையை மீறி பறக்கும் கனரக வாகனங்களால் அச்சத்தில் மக்கள்

திருமங்கலம் :சுங்கச்சாவடியை தவிர்க்க நகரில் தடையை மீறி பறக்கும் கனரக வாகனங்களால் அச்சத்தில் மக்கள்

மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச்சாலையாக மாற்றப்பட்ட பின் திருமங்கலம் கப்பலூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நகராட்சியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் சுங்கச்சாவடி அமைக்ககூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுடன் அமைக்கப்பட்ட இந்த சாவடி கட்டணத்திலிருந்து தப்பிக்க வாகன ஓட்டிகள் கண்டுபிடித்த வழித்தடம் திருமங்கலத்திலிருந்து மதுரை விமானநிலையம் செல்லும் சாலை. திருமங்கலம் தொடருந்து நிலையத்தின் அருகே துவங்கும் இந்த சாலையில் அதற்கு முன்பு வாகனப் போக்குவரத்து மிகவும் குறைவாகவே இருந்தது. அரைமணி நேரத்திற்கு ஒரு நகர்ப்பேருந்து மட்டுமே செல்லும் இந்த சாலையில் தற்போது நிமிடத்திற்கு நான்கு லாரிகள், டேங்கர் லாரிகள் என கனரக வாகனங்களின் புகுந்து வெளியேறுவதால் நகர மக்களின் நிம்மதி தொலைந்து விட்டது.

திருமங்கலத்தின் புறநகர் பகுதியான கற்பகநகர், காமராஜர்புரம், பிசிஎம் நகர், சூர்யாநகர், சோணை மீனாநகர் மற்றும் விடத்தகுளம், விரிசங்குளம், ஓ.ஆலங்குளம் வழியாக மதுரை விமான நிலையம் அமைந்துள்ள மண்டேலாநகர் சுற்றுச்சாலையில் இச்சாலை அடைகிறது. நெல்லை, நாகர்கோவில், சிவகாசி, இராசபாளையம், விருதுநகர், தென்காசி, பாபநாசம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து திருச்சி, சென்னை செல்லும் கனரக வாகனங்கள் கப்பலூர் சுங்கச்சாவடியை தவிர்க்க விமானநிலையச் சாலையில் பறந்து மதுரை வழியாக சென்று வருகின்றனர். கிராமப்பகுதிகளை உள்ளடக்கிய இச்சாலையில் மின்னல் வேகத்தில் பறக்கும் லாரி, கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றன. குறிப்பாக அதிகாலை 4 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணிமுதல் நள்ளிரவிலும் இப்பகுதியில் மின்னல் வேகத்தில் செல்லும் மணல் கடத்தல் லாரிகளால் கற்பகநகர், காமராஜர்புரம் பகுதி மக்கள் அச்சத்துடனேயே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் கல்லூரி மற்றும் பள்ளிகள் அதிகம் என்பதால் சைக்கிள், டூவீலர்களில் பயணம் செய்யும் மாணவ, மாணவியர்களும் நடுக்கத்துடனேயே பயணம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. டேங்கர் லாரி உள்ளிட்ட லாரிகள் செல்லும் போது ஒரு சில வீடுகளில் அதிர்வு ஏற்படுவதாக இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிர வைக்கும் ஒலிப்பான்களால் முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். காலையில் நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள் அசுர லாரிகளால் பீதியடைந்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கலத்தின் நடைபயிற்சி செல்ல சிறந்த ரோடாக இருந்த விமான நிலையச்சாலை தற்போது மரணச்சாலையாக மாறியுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மணல் லாரிகள் அதிகளவில் செல்வதால் காற்றில் பறக்கும் மணல் தூசிகள் வீடுகள் வரையில் பரவி வருவதாகவும், சாலையின் இருபுறமும் மணல்மேடாக மாறி வருதாகவும் குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். கனரக வாகங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பலமுறை போலீசில் புகார் கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. காவல்துறையினர் சுற்றுச்சாலையில் இச்சாலை துவங்கும் வலையபட்டி விலக்கில் கனரக வாகனங்கள் செல்லகூடாது என எச்சரிக்கைப்பலகை வைத்து தடைவிதித்தனர். ஓரிரு மாதங்கள் மட்டுமே வாகனங்கள் வராமல் இருந்தன. தற்போது மீண்டும் அதிகரித்துவிட்டது. இதனால் விபத்துகள் அதிகரித்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் மின்னல் வேகத்தில் வந்த லாரியில் சிக்கி டூவீலரில் வந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். மாவட்ட ஆட்சியர், காவல்கண்காணிப்பாளரின் உத்தரவு காற்றில் பறக்கிறது. திருமங்கலம் நகர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து லாரிகள் உள்ளிட்டவைகள் மீண்டும் விமானநிலையச்சாலையில் செல்ல தடை விதிக்கவேண்டும்” என்றார் அப்பகுதி பொது மக்கள்.
படம் & செய்தி: தினகரன்

Tirumangalam - Madurai Airport road turned to be one of the dangerous roads of the district due to rash driving of heavy vehicle.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top