website loader
×

12 ஆண்டுகளுக்குப் பின் சல்லிக்கட்டு நடத்தும் கரடிக்கல்

திருமங்கலம் : 12 ஆண்டுகளுக்குப் பின் சல்லிக்கட்டு விமர்சியாய் நடத்தவிருக்கும் கரடிக்கல் ஊர் மக்கள்.

கரடிக்கல்லில் புகழ்பெற்ற மலைக்கோயிலான சுந்தரராஜபெருமாள் கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழாவில் பெருமாளின் திருக்கல்யாணத்தையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் தை மாதத்தில் சல்லிக்கட்டு நடைபெறும். ஆனால் கரடிக்கல்லில் பங்குனி மாதத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இது திருமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறும் ஒரே சல்லிக்கட்டு என்பதால் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான மாடுபிடிவீரர்கள், காளைகள் கலந்து கொள்வது வழக்கம். கடந்த 2005ம் ஆண்டு கரடிக்கல்லில் சல்லிக்கட்டு நடந்தது. அதன் பின்பு ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டு தடை காரணமாக இங்கு சல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்நிலையில் தற்போது சல்லிக்கட்டுக்கான தடை நீங்கியுள்ளதை தொடர்ந்து இந்தாண்டு தங்கள் கிராமத் திருவிழாவின் போது சல்லிக்கட்டு நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர்.

இது குறித்து நேற்று கரடிக்கல் கிராமத்தில் ஊர் பெரியவர்கள் தலைமையில் கிராம மக்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் சுந்தரராஜ பெருமாள் கோயில் மாசி திருவிழாவில் சல்லிக்கட்டு நடத்துவது குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 2ம் தேதி சல்லிக்கட்டு நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், போலீசார் உள்ளிட்டோரை நேரில் சந்திக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளுக்கு பின்பு கரடிக்கல்லில் சல்லிக்கட்டு நடத்தபட உள்ளது சுற்றுவட்டார பொது மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கரடிக்கல்லில் ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் முடிவு.
செய்தி: தினகரன்

After 12 years of gap, Karadikkal village people decided to conduct Jallikattu this year.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top