website loader
×

திறந்தவெளியில் மலம் கழித்தவருக்கு பூர்ணகும்ப மரியாதை செய்த நகராட்சி

திருமங்கலம் : திருமங்கலம் நகராட்சியில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை வசதிகள் உள்ளன. இதே போல் நகரில் பல்வேறு பகுதிகளில் பொது கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளன.

திருமங்கலத்தை திறந்தவெளி கழிப்பறை இல்லாத நகராக மாற்ற நகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குண்டாற்றினை ஒட்டியுள்ள தெற்குதெரு பகுதியில் மட்டும் பொதுமக்கள் பலரும் ஆற்றங்கரையை திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்திவருகின்றனர். நகரில் வேறு எங்கும் திறந்தவெளி கழிப்பறை இல்லாத நிலையில் தெற்குதெரு பகுதியில் மட்டும் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துவதால் ஆற்றுப்பகுதி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை தவிர்க்க நகராட்சி நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்தது. ஆணையாளர் சரஸ்வதி உத்தரவுப்படி சுகாதார அலுவலர் ராஜமோகன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சிக்கந்தர், சசிகலா மற்றும் சுகாதார பணியாளர்கள் அடங்கிய குழுவினர் அதிகாலை 5 மணிக்கு தெற்குதெரு பகுதியில் உள்ள குண்டாற்றங்கரையில் முகாமிட்டு அங்கு திறந்தவெளி கழிப்பிடத்திற்கு வந்த பொது மக்களுக்கு பூர்ண கும்பமரியாதை செய்தனர். மேலும் தாம்பூலதட்டில் சந்தனம், குங்குமம் கொடுத்து தயவு செய்து யாரும் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்காதீர்கள் என கூறி பத்திரிகை வடிவில் அச்சடிக்கப்பட்ட துண்டுபிரசுங்களை விநியோகதித்து அருகேயுள்ள நகராட்சி இலவச கழிப்பறைக்கு அனுப்பி வைத்தனர். நகராட்சி அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் திகைத்த நகர மக்கள் அவர்களின் புதுமையான நடவடிக்கைக்கு பாராட்டுகளை தெரிவித்து இனி மேல் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்த மாட்டோம் என உறுதி கூறிச் சென்றனர்.

5 மணி முதல் காலை 8 மணி வரை தொடர்ந்து இந்த நடவடிக்கையால் நேற்று பலரும் திறந்தவெளியை பயன்படுத்தாமல் நகராட்சி பொது கழிப்பறைக்கு சென்றனர். இதனால் நகராட்சி சுகாதாரத்துறையினரும் நிம்மதியடைந்தனர். திருமங்கலம் நகராட்சியின் இந்த புதிய அணுகுமுறை நகரமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
செய்தி: தினகரன்

Tirumangalam Municipality took action against open air toilet in the town.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top