website loader
×

முன் அறிவிப்பின்றி 10 மணி நேரம் ரயில்வேகேட் மூடியதால் மக்கள் அவதி

திருமங்கலம் : முன் அறிவிப்பின்றி பராமரிப்பு பணிக்காக திடீரென ரயில்வே கேட் 10 மணி நேரத்திற்கு மேல் மூடப்பட்டதால், பொதுமக்கள், மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.

திருமங்கலம் இரயில் நிலையத்தையொட்டி விடத்தகுளம் ரோட்டில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. ரயில்வே கேட்டினை கடந்து நகரின் புறநகர் பகுதியான கற்பகநகர், காமராஜர்புரம், சோணைமீனாநகர், ஆறுமுகம் ரோடு மற்றும் சுங்குராம்பட்டி, விடத்தகுளம், விருசங்குளம், எட்டுநாழி உள்ளிட்ட கிராமபகுதிகளும் அமைந்துள்ளன. இந்த பகுதியில் கல்லூரி மற்றும் பள்ளிகளும் அதிகளவில் உள்ளன.

இந்த நிலையில் நேற்று திருமங்கலம் ரயில்வே கேட்டினை யொட்டியுள்ள பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக கேட்டினை மூடி பணி செய்ய இரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இதற்கான அறிவிப்புகள் எதுவும் வெளியிடாமல் நேற்று காலை 8 மணிக்கு கேட் மூடப்பட்டது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கேட் மூடியே கிடந்ததால் கடும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் மதுரை பெரியார் நிலையத்திலிருந்து அவனியாபுரம், பெருங்குடி வழியாக திருமங்கலத்திற்கு வரும் நகரப் பேருந்தும் திருமங்கலம் பேருந்து நிலையத்திற்கு வரமுடியாமல் கற்பகநகரில் நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டது. டூவிலரில் செல்பவர்கள் பாண்டியன்நகர் கேட்டினை கடந்து சென்றதால் விருதுநகர் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து கற்பகநகரினை சேர்ந்த அசோகன் கூறுகையில், தண்டவாள பராமரிப்பு பணிக்காக ரயில் கேட்டினை மூடி பணி செய்வது குறித்து முறையான அறிவிப்பு எதுவும் பொதுமக்களுக்கு கொடுப்படவில்லை. வழக்கம் போல் கேட் மூடப்பட்டுள்ளதாக நினைத்து ஏராளமானோர் காலையில் கேட்டில் காத்திருக்க வேண்டிநிலை ஏற்பட்டதால் அலுவலகம், பள்ளி, கல்லூரிக்கு தாமதமாக சென்றனர்.

இது மாதிரியான பராமரிப்பு பணிகள் குறித்து முறையான அறிவிப்பு செய்திருந்தால் பொதுமக்கள் சிரமம் ஏற்பட்டிருக்காது. மேலும் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பணிகளை செய்தால் நல்லது. நேற்று 10ம் வகுப்பு தேர்வு துவங்கியது. கேட் மூடப்பட்டது தெரியாமல் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கேட்டில் மாட்டி திணறி தேர்வு எழுத சென்ற வேதனையான விஷயம் என்றார். இரவு 7 மணியளவில் கேட் பராமரிப்புப்பணி நிறைவடைந்து கேட் திறக்கப்பட்டது.
செய்தி: தினகரன்

Without proper information Karpaga Nagar Railway gate closed nearly 10 hours for track maintenance

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top