website loader
×

முதலமைச்சர் வருகைக்காக திறப்புவிழா காணாத குண்டாற்று தரைப்பாலம்

திருமங்கலம் : முதலமைச்சர் வருகைக்காக காத்திருக்கும் திருமங்கலம் குண்டாற்று தரைப்பாலம் திறப்புவிழா

திருமங்கலத்தில் மதுரை-விருதுநகர் நான்குவழிச்சாலையை யொட்டி குண்டாற்றின் கரையில், புகழ்பெற்ற காட்டுபத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. ஊருக்குள்ளிருந்து இந்தக் கோயிலுக்கு செல்ல குண்டாற்றில் இறங்கி செல்ல வேண்டும். மழைகாலங்களில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தால், பக்தர்களால் கோயிலுக்கு செல்லமுடியாது. மேலும், குண்டாற்றின் கரையை ஒட்டி குடியிருக்கும் பொதுமக்களும் குண்டாற்றை கடந்து செல்ல அவதிப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து, காட்டுபத்திரகாளியம்மன் கோயிலுக்கு செல்ல குண்டாற்றில், ரூ.95 லட்சம் மதிப்பில் தரைப்பாலம் கட்டப்பட்டது. இதேபோல் திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட வேங்கடசமுத்திரம் பகுதிக்கும் குண்டாற்றை கடந்து செல்ல வேண்டும். இதனால், அந்த பகுதி மக்கள் சிரமமடைந்தனர். அவர்களின் போக்குவரத்து வசதிக்காக வேங்கடசமுத்திரம் பகுதியில் மற்றொரு தரைபாலம் ரூ.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. இந்த இரண்டு பாலங்களும் சட்டசபையில் 110 விதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு, கடந்தாண்டு மார்ச் மாதம் பணிகள் தொடங்கின. மேலும், முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் பொதுநிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தற்போது முடிவடைந்து விட்டது. காட்டுபத்திரகாளியம்மன் கோயிலுக்கு செல்லும் தரைப்பாலம் ஆற்றுப்பகுதியில் 62 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல வேங்கடசமுத்திரத்திற்கு செல்லும் தரைப்பாலம் 46 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பாலத்திலும் நீர்போக்குவரத்திற்கு உருளை பைப்புகள் வைக்கப்பட்டுள்ளது. பாலங்கள் கட்டி முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும், இரண்டு பாலங்களையும் திறந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்படவில்லை. ரூ.50 லட்சத்திற்கு மேலான மதிப்பிலான கட்டிடங்களை முதல்வர்தான் திறக்க வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள். இதனால், கட்டி முடிக்கப்பட்ட இரண்டு தரைப்பாலங்களும் முதல்வரின் வருகைக்காக காத்திருக்கின்றன
செய்தி: தினகரன்

Tirumangalam Gundar river bridge opening ceremony waiting for CM's arrival

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top