website loader
×

சதுரகிரி கோவிலுக்கு ஆண்டு முழுவதும் அனுமதிக்க மக்கள் கோரிக்கை

திருமங்கலம் : விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்கு மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும், விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்தராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் வருசநாடு பகுதியிலிருந்தும் செல்லலாம். வத்திராயிருப்பு மற்றும் வருசநாடு வழியாக தற்போது கோவிலுக்கு சென்று வருகின்றனர். ஆடி அமாவாசை, தை அமாவாசை, சிவராத்திரி ஆகிய முக்கிய நாட்களுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகமான பக்தர்கள் சதுரகிரி சென்று வழிபட்டு வருகின்றனர். இதே போல் பவுர்ணமிக்கும் தரிசனம் செய்ய சென்று வருகின்றனர். இந்த கால கட்டங்களில் பக்தர்களை வனத்துறையின் முழுமையாக சோதனை செய்து அனுப்புகின்றனர். 3 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை மட்டுமே பக்தர்கள் தங்கி சாமி தரிசனம் செய்ய அனுமதி உள்ளது. மலைப்பாதையில் பக்தர்கள் செல்லும் போது காவல்துறை, வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். முக்கிய இடங்களில் ரோப் (கயிறு) வசதி செய்யப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய, பாலித்தீன் உள்ளிட்ட பொருட்களை வனப்பகுதிக்குள் பொதுமக்கள் எடுத்து செல்லக்கூடாது என விதிகள் உள்ளது. இதற்கிடையே, பக்தர்களை ஆண்டு முழுவதும் தரிசனம் செய்ய அனுமதிக்க வனத்துறையினர் மற் றும் இந்து சமய அறநிலையத்துறையினர் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
செய்தி: தினகரன்

Devotees requested government to allow for worshiping sundaramahalingam al through the year

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top