திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் வைகாசி திருவிழா தேதி அறிவிப்பு

திருமங்கலம் : திருமங்கலத்தில் அமைந்துள்ள பத்திரகாளி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 13 நாட்கள் வைகாசி திருவிழா கொண்டாப்படும். மே மாதம் 28ம் நாள் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கவுள்ள திருவிழாவின் 13 நாட்களும் காலை மாலை இருவேளைகளிலும் மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளலாகி நகர்வலம் நடைபெறும்.

ஒன்றாம் நாள் சிம்ம வாகனம், இரண்டாம் நாள் பூத வாகனம், மூன்றாம் நாள் அன்ன வாகனம், நாஙாம் நாள் காமதேனு வாகனம், ஐந்தாம் நாள் குதிரயோட்டம், ஆறாம் நாள் சமணர் கழுவேற்றம், ஏழாம் நாள் பூப்பல்லக்கு, எட்டாம் நாள் பூச்சப்பரம், ஒன்பதாம் நாள் முளைப்பாரி, பத்தாம் நாள் மகிசாசூரசம்காரம், பதினோறாம் நாள் மாவிளக்கு, பன்னிரெண்டாம் நாள் மஞ்சள் நீராட்டு மற்றும் யானை வாகனம், பதிமூன்றாம் நாள் ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருளல் ஆகி குண்டாறு இறங்கி பழைய மாரியம்மன் கோவில் சேர்தல், இரவு தசாவதாரக் காட்சி, மறுநாள் விடியற்காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடையும்.

Tirumangalam Pathirakali Mariyamman temple vaigasi festival starts May 28