சிவரக்கோட்டையில் ஒரு வாரமாக குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருமங்கலம் : பருவமழை பொய்த்ததால் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தமிழக அரசு பல்வேறு இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் புதிதாக போட்டு தண்ணீர் வழங்கி வருகிறது. இந்நிலையில் திருமங்கலம் வட்டம் சிவரக்கோட்டையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் உடைந்த குடிநீர் குழாய் இன்று வரை சரிபார்க்காமல், நீர் வீணாக சாலையில் ஓடுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி செயலருக்கு புகார் அளித்தும் சரி செய்யப்படவில்லை. இது குறித்து கிராம நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
படம் & செய்தி: இராமலிங்கம் ஐயா

Drinking water pipe damaged and water flow on road for the past 1 week

நம் திருமங்கலத்தைப் பற்றின இது போன்ற தகவல்கள் உங்களுக்குத் தெரிந்தால் தயங்காமல் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். தங்கள் பெயருடன் நம் Tirumangalam.com இணையதளத்தில் பதிவிடப்படும். Send ur mail to admin@tirumangalam.com-->