சுட்டெரிக்கும் வெயிலில் நாளும் 5 கிமீ நடந்து பள்ளி செல்லும் மாணவிகள்

திருமங்கலம் : பேருந்து வசதி இல்லாததால் சுட்டெரிக்கும் வெயிலில் காலில் செருப்பின்றி நாளும் 5 கிமீ நடந்தும் ஓடியும் பள்ளி செல்லும் மாணவிகள்


திருமங்கலம் வட்டம், நல்லபிள்ளைபட்டி, ஜோசியர் ஆலங்குளம், ஊரண்ட உரப்பனூர், குருவனந்தபுரம் போன்ற கிராமங்களுக்கு முறையாக பேருந்து வசதி இல்லை. பேருந்து செல்ல சாலையும் புதுப்பிக்கப்படவில்லை. இக்கிராமங்களில் துவக்கப்பள்ளி உண்டு ஆனால் உயர்நிலை படிக்க 5கிமீ தொலைவிலுள்ள உரப்பனூருக்கு நடந்து தான் செல்ல வேண்டும். தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச செருப்பும் தரமற்று அறுந்து போன நிலையில் சுட்டெரிக்கும் வெயிலில் காலில் செறுப்பு கூட இல்லாமல் அவசரகதியில் நடந்தும் ஓடியும் பள்ளிக்கு செல்கின்றனர். இதனை கண்டுகொள்வாரா மதுரை மாவட்ட ஆட்சியர்?

இப்படி அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் படித்து வரும் மாணவ மாணவிகள், உயர் படிப்பிற்கு இலட்சங்கள் செலவழித்து கோச்சிங் வகுப்புகள் செல்லும் மாணவ மாணவிகளோடு நீட் தேர்வில் போராட வேண்டும் என அரசுகள் கூறுகிறது..
செய்தி&படம்: தினமலர்

students near Urappanur have to go school by walk which is located 5km ahead from their villages