website loader
×

வறட்சியால் கருகிய செங்கரும்பு பயிர்கள் : உழவர்கள் வேதனை

திருமங்கலம் : பேரையூர் தாலுகாவில் முருகனேரி, செங்குளம், தாதன்குளம், கோபிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழையின்றி நிலத்தடி நீர் குறைந்து, செங்கரும்பு, பருத்தி போன்ற இறவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் செங்கரும்பு நடவு செய்யப்பட்டது. பருவமழை பொய்த்ததால், கிணறு மற்றும் 'போர்வெல்'லில் தண்ணீர் இல்லாமல் நல்ல நிலையில் வளர்ந்த செங்கரும்பு சாய்ந்து கருகிவிட்டது. காய்ந்து கருகியதால் விலைக்கு வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை. மழையின்றி நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், இறவை பாசனத்தில் செய்துள்ள வேளாண் சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மனம் நொந்து போயுள்ளனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணமும் வழங்கப்படவில்லை.

விவசாயி தங்கமலை: கடந்த 30 ஆண்டுகளில் இப்படி ஒரு வறட்சியை பார்த்தது இல்லை. 2 ஏக்கரில் 2 லட்சம் ரூபாய் செலவு செய்து செங்கரும்பு பயிரிட்டேன். தண்ணீர் இல்லாததால் கரும்பு சாய்ந்து கருகிவிட்டது. எட்டு மாதங்களுக்கு முன்பு கரும்பு நடவு செய்தோம். பருவமழை கை கொடுக்காததால் பயிர்கள் அனைத்தும் காய்ந்துவிட்டன. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிர்கள் காய்ந்துவிட்டன. தண்ணீர் பற்றாக்குறையால் 10 அடி உயரம் வளரவேண்டிய கரும்பு, 5 அடி வரைதான் வளர்ந்துள்ளது.

தாலுகா அலுவலகம் அலைந்து பார்த்தும் வறட்சி நிவாரணம் கிடைக்க வில்லை. வங்கியில் வாங்கிய கடனுக்கு வாரவாரம் தேடி வருகின்றனர். 7 'போர்' அமைத்து பார்த்தும் தண்ணீர் இல்லை. பருத்தி செடியும் வாடி வதங்கி வருகிறது. 300 தேக்கு மரம் வளர்த்து வந்தேன் அதில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் காய்ந்து விட்டன, என்றார். உண்மையான விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்தி&படம்: தினமலர்

Farmers worried about their Sugarcane crops dried due to drought near Peraiyur

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top