website loader
×

கள்ளிக்குடி பகுதியில் அடிக்கடி மின்தடை; பொதுமக்கள் அவதி

திருமங்கலம் : கள்ளிக்குடி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி ஒன்றியத்தில் வடக்கம்பட்டி, கள்ளிக்குடிசத்திரம், ஓடைப்பட்டி, குராயூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. பல மணி நேரம் நீடிக்கும் இந்த மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். அதிலும் இரவில் மின்தடை ஏற்படும் போது வெப்பத்தின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தவிர மின் ஊழியர்கள் அல்லாதவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மின்மாற்றிகளை இயக்குவதாலும் மின்தடை ஏற்படுவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மின் விநியோகத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: தினமணி

Powercut happened number of times in and around Kalligudi village

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top