website loader
×

மேலக்கோட்டையில் ஒரே ஒரு போர்வெல்லை நம்பி 1200 வீடுகள்

திருமங்கலம் : திருமங்கலத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ளது மேலக்கோட்டை கிராமம். இங்கு 1200 வீடுகள் உள்ளன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய ஒரே ஒரு 'போர்வெல்' மட்டுமே உள்ளது. இதனால் இந்த 'போர்வெல்' 24 மணி நேரமும் தடையின்றி இயங்கி வருகிறது. இப்படி தொடர்ந்து பம்பிங் செய்யும் போது மோட்டார் பழுதானால் சரி செய்யும் வரை குடிநீர் சப்ளை நிறுத்தப்படுகிறது. தவிர குடிநீர் சப்ளை செய்யும் போது பல வீடுகளில் மோட்டார் போட்டு நீர் உறிஞ்சிக்கொள்கின்றனர்.

எனவே குடிநீர் விநியோகத்திலும் குழப்பம் ஏற்படுகிறது. மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் இக்கிராமத்திற்கு குறைந்தது இன்னும் 3 'போர்வெல்' அமைத்து சப்ளை செய்ய வேண்டும் என இக்கிராம மக்கள் கிராம ஊராட்சி பி.டி.ஓ., ராஜேந்திரனிடம் முறையிட்டனர். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
செய்தி: தினமலர்

There is only one borewell water source for around 1200 families in Melakottai

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top