website loader
×

வறண்ட திருமங்கலம் கண்மாய்கள் 400 அடிக்கு சென்ற நிலத்தடி நீர்

திருமங்கலம் : திருமங்கலம் நகரைச் சுற்றியிருக்கும் 10 கண்மாய்களும் கடந்த 6 ஆண்டுகளாக நிரம்பாததால் 40 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம், 400 அடியாக சரிந்துள்ளது.

திருமங்கலம் நகரைச் சுற்றி குதிரைசாரிக்குளம், மறவன்குளம், வடகரை கண்மாய், செங்குளம் கண்மாய், உடைகுளம் கண்மாய், உரப்பனூர் கண்மாய், ஆனைப்பாப்பான் குளம் கண்மாய், கரிசல்குளம் கண்மாய், வேங்கடசமுத்திரம் கண்மாய் ஆகிய கண்மாய்கள் உள்ளன. இக்கண்மாய்கள் நிறந்தால் திருமங்கலத்தில் 40 அடி ஆழத்தில் தரமான நிலத்தடி நீர் கிடைக்கும், இதனால் மக்களுக்கு குடிநீர் சிக்கல் இல்லாத சூழல் இருந்தது.

கடந்த ஆறு ஆண்டுகளாக இக்கண்மாய் எதுவும் நிரம்பவில்லை. இடையிடையே சிறிய அளவில் மட்டுமே நீர் தேங்கியது. இக்கண்மாய்கள் பராமரிப்பின்றி சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் நிலங்கள் வறண்டு திருமங்கலம் மட்டும் சுற்றுவட்டார கிராமங்களின் நிலத்தடி நீரும் 40 அடியில் இருந்து 400 அடிக்கும் கீழ் சென்று விட்டது.

இதனை கருத்திற்கொண்டு நகராட்சி பொறியாளர் சக்திவேல் கூறியதாவது: திருமங்கலத்திற்கு சோழவந்தானில் ஆற்றில் கிணறு தோண்டப்பட்டு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. தற்போது கிணறுகளில் நீ ஊற்று குறைந்து தினமும் 10 இலட்சம் லிட்டர் நீரே கிடைக்கிறது. காவிரி கூட்டுக் குடிநீர் கைகொடுப்பதால் ஓரளவிற்கு சமாளிக்க முடிகிறது. நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க, திருமங்கலத்தைச் சுற்றியுள்ள கண்மாய்களை தூர்வாரி சீரமைத்தாலே சிக்கல் பெருமளவு குறையும்.

குண்டாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் லீலாவதி கூறியதாவது: திருமங்கலம் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கண்மாய்கள் தூர்வாரப்பட்டன. தற்போது மீண்டும் தூர்வார திட்டமிட்டுள்ளோம். வரும் நிதியாண்டில் கண்மாய்களை தூர்வாரி னீர்வரத்து வடிகால்களையும் சீரமைக்க உள்ளோம், என்றார்.
செய்தி: தினமலர்

Tirumangalam Municipality assure to clean water bodies in and around Tirumangalam soon

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top