website loader
×

கப்பலூர் சுங்கச்சாவடியில் கிரேன், ஆம்புலன்ஸ் வசதிகள் திடீர் மாயம்

திருமங்கலம் : கப்பலூர் சுங்கச்சாவடியில் கிரேன், ஆம்புலன்ஸ் வசதிகள் திடீர் மாயம்: பொன்னாரிடம் கோரிக்கை

திருமங்கலம் பகுதி நான்கு வழிச்சாலையில் கப்பலூர் கிராமத்தின் அருகில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் ஒப்பந்ததாரர் மூலமாக இயக்கப்பட்டு வரும் டோல்கேட் செயல்பட்டு வருகிறது.தென்மாவட்டங்களுக்கு நுழைவு வாயிலாக திகழ்ந்திடும் இந்த கப்பலூர் டோல்கேட் வழியாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்வது வழக்கமான ஒன்றாகும்.இந்நிலையில் சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் தொடங்கி விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஓர் இலக்கு வரையில் உள்ள சாலை கப்பலூர் டோல்கேட்டின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வளையத்தில் வருகிறது.தினமும் பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் பயணிப்பதன் மூலம் கப்பலூர் டோல்கேட் வசூலை வாரிக்குவித்து வரும் நிலையில் தனது எல்கைக்கு உட்பட்ட நான்கு வழிச்சாலையை பராமரிப்பதில் டோல்கேட் நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது.குண்டும் குழியுமான சாலைகள்,செயல்படாத உயர்கோபுர மின்விளக்குகள்,விபத்துகளால் சாலையில் சிதறிக் கிடக்கும் கண்ணாடிச் சில்லுகள்,பராமரிக்கப்படாததால் மண்மேடாகி கிடக்கும் சாலைகள்,தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படாததால் சாலையில் சிதறியிருக்கும் குப்பைகள் என எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால் கப்பலூர் டோல்கேட் நிர்வாகத்தில் எல்லைக்கு உட்பட்ட நான்கு வழிச்சாலை நரக வழிச்சாலையாக மாறிக் கிடக்கிறது.<ப்ர்><ப்ர்>இந்நிலையில் நான்கு வழிச்சாலையில் விபத்துக்கள் ஏற்படும் சமயத்தில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிட ஆம்புலன்ஸ் வாகனம்,விபத்தில் நொறுங்கி கிடக்கும் வாகனங்களை மீட்டு அப்புறப்படுத்திட ராட்சத கிரேன் மற்றும் சாலை பராமரிப்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்திட ஹைவே பேட்ரோல் எனப்படும் ரோந்து வாகனம் ஆகியவை கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் சார்பில் 24மணி நேரமும் இயங்கி வந்தது.இதன் மூலம் விபத்துகளில் சிக்குவோருக்கு உடனடி மருத்துவ உதவியும்,விபத்தில் சிக்கும் வாகனங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பும் வெகுவாக குறைந்து இருந்தது.இதனிடையே கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக கப்பலூர் டோல்கேட் சார்பில் இயக்கப்பட்டு வந்து ஆம்புலன்ஸ்,கிரேன் மற்றும் ரோந்து வாகனங்கள் திடீரென்று தங்களது சேவையை நிறுத்தி விட்டு மாயமாகிவிட்டது.இதன் காரணமாக திருமங்கலம் பகுதி நான்குவழிச் சாலையில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.தற்போது திருமங்கலம் பகுதி நான்கு வழிச்சாலையில் நிகழ்ந்திடும் விபத்துகளில் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றிட அரசின் 108 இலவச ஆம்புலன்சுகள் மட்டுமே பயன்படுத் தப்பட்டு வருகிறது.
செய்தி: தினபூமி

Ambulance, crane facilities hasbeen banished in Kappalur Tollgate near Tirumangalam

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top