website loader
×

பேரையூர் முதல் சந்தையூர் வரை குண்டும் குழியுமான சாலை

திருமங்கலம் : பேரையூர் முதல் சந்தையூர் வரை குண்டும் குழியுமான சாலை, வாக ஓட்டிகள் அவதி

பேரையூர் முதல் தும்மநாயக்கன்பட்டி, கீழப்பட்டி, சந்தையூர் வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் டூவீலர்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களூம் நடக்கின்றன. இந்த சாலையை வத்திராயிருப்பு உள்ளிட்ட விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஊர்களுக்கு செல்பவர்கள் பயன்படுத்துகின்றனர். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்பவர்களும் பயன்படுத்துகின்றனர். பல ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கும் இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. காய்கறிகள், மல்லிகைப்பூ ஆகியவற்றை சந்தைக்கு ஏற்றிச் செல்லும் விவசாயிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். பேரையூர் செல்ல மாற்றுப்பாதை இல்லை. எனவே, இந்த சாலையை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சந்தையூர் ராக்கெட்ராஜா கூறுகையில், ‘5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த வழியாக மாவட்ட ஆட்சியர் முதல் எத்தனையோ உயரதிகாரிகள் வாகனங்களில் வந்து செல்கின்றனர். சாலையை சீரமைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சம்மந்தமாக பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஒவ்வொரு தேவைக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம், முற்றுகை உள்ளிட்ட நடவடிக்கைகளை கையிலெடுத்தால்தான் தீர்வு கிடைக்கிறது. இப்பகுதிகளில் பள்ளங்களை கடக்க ஒதுக்கும்போது, வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
செய்தி: தினகரன்

The road condition in-between Peraiyur and Santhaiyur affected very badly

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top