website loader
×

மோசமான நிலையில் திருமங்கலம் - சென்னை அரசு விரைவுப் பேருந்து

திருமங்கலம்: மழைக் காலங்களில் ஒழுகியும், முறையாக பராமரிக்கப்படாமலும் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் திருமங்கலம் – சென்னை அரசு விரைவுப் பேருந்து.

திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருமங்கலம் – சென்னை இடையே இருவழிப் போக்குவரத்து, தமிழக அரசால் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் திருமங்கலம் அரசு போக்குவரத்துப் பணிமனையின் கீழ் இப்பேருந்துகள் இயங்கி வந்தன. திருமங்கலத்துப் பணிமனை ஊழியர்களும் பேருந்தை நன்கு பராமரித்து மேற்கொண்டு வந்தனர். பயணிகளும் எவ்வித சிக்கலுமின்றி பயணித்து வந்தனர்.

இந்நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்னர், திருமங்கலத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள், மதுரை அரசு விரைவு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து ஆரம்பமானது சோதனை காலம். பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. திருமங்கலத்திற்காக ஒதுக்கிய பேருந்தை விடுத்து, தேனி – சென்னை வழித்தடத்தில் இயங்கி அலுத்துப்போன பழைய தகரப் பேருந்து மாற்றப்பட்டது. ஆனால் உசிலம்பட்டி, விருதுநகர், பேரையூர் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு தரமான பேருந்துகள் இன்றும் அனுப்பப்படுகின்றது. மேலும் வெயிலும் மழையும் தாங்கிய பழைய திருமங்கலம் – சென்னை பேருந்து இன்று குடைக்குள் மழையாகிவிட்டது. கண்ணாடி ஜன்னல்கள் தகர தடுப்புகளாயின. நில்லாமல் சென்ற பேருந்து இல்லாமல் ஆகிவிட்டது

கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டசபையில் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு முத்துராமலிங்கம் அவர்கள் ஏற்கனவே திருமங்கலம் – சென்னை வழித்தடத்தில் இயங்கும் பழைய பேருந்தை மாற்றி புதிய பேருந்தும், கூடுதலாக ஒரு பேருந்தும் இயக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். விரைவில் இயக்கப்படும் என அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி தெரிவித்தார். ஆனால் இன்று வரை இயக்கப்படவில்லை.

எங்களது கோரிக்கை இது தான் - மற்ற ஊர்களைப் போல் திருமங்கலத்திற்கும் தரமான பேருந்து வேண்டும். வார இறுதி நாட்களில் சென்னை மற்றும் பெங்களூருவிற்கு கூடுதலாக இரவுப் பேருந்துகள் இயக்க வேண்டும். சட்டமன்றத்தில் மீண்டும் கோருவாரா நம் சட்டமன்ற உறுப்பினர்?

Govt bus operating between Tirumangalam – Chennai is in very worst condition. Tirumangalam MLA should raise queries about this issue in Tamil Nadu Assembly.






தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top