website loader
×

கடும் வறட்சியால் திருமங்கலத்தில் ஆடு வளர்ப்பு குறைந்தது

திருமங்கலம் : வறட்சியால் தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டு, திருமங்கலம் ஆட்டுச்சந்தைக்கு ஆடுகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால், வைகாசி, ஆடி மாதங்களில் ஆடுகளுக்கு டிமாண்ட் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், பேரையூர், மேலூர், உசிலம்பட்டி, வாடிப்பட்டி, கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி, மேலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இவை பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. திருமங்கலத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கும். இது தென் மாவட்டங்களிலேயே பெரிய ஆட்டுச்சந்தையாகும். வாரந்தோறும் குறைந்தது 2,500 ஆடுகள் விற்பனைக்கு வரும். இங்கு ஆடுகளை வாங்க சிவகாசி, சங்கரன்கோயில், மதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், தேனி, கம்பம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருவர்.இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக திருமங்கலம் சந்தைக்கு வரும் ஆடுகளின் எண்ணிக்கை மூன்றில் ஒருபங்காக குறைந்துள்ளது. கடந்த வாரம் நடந்த ஆட்டுச்சந்தையில் சுமார் 700 முதல் 800 ஆடுகள் மட்டும் சந்தைக்கு வந்தன. வறட்சி காரணமாக ஆடுகளை விவசாயிகளை விற்று வருகின்றனர். ஒரு விவசாயி அல்லது ஆடுவளர்ப்போரிடம் குறைந்த பட்சம் 25 ஆடுகள் இருக்கும். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால், தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் தங்களிடம் 5 அல்லது 10 ஆடுகளை மட்டும் வைத்துக் கொண்டு, மற்ற ஆடுகளை உள்ளூரில் விற்பனை செய்கின்றனர். இதனால் ஆட்டுசந்தைக்கு வரும் ஆடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வறட்சியால் தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளத. கண்மாய், குளங்கள் எல்லாம் வறண்டு போயிருப்பதால் ஆடுகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. தீவன தட்டுப்பாடு, தண்ணீர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் ஆடுகளை வளர்க்க முடியாமல் விற்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆடுகளின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. வைகாசி மாதத்தில் கோயில் திருவிழா மற்றும் ஆடி மாதத்தில் வரும் தலையாடி, நடுஆடி, கடைசி ஆடி உள்ளிட்ட விஷேச தினங்களுக்கு ஆடுகளுக்கு டிமாண்ட் ஏற்படும். பருவமழை பெய்து விவசாயம் செழித்தால் தான் ஆடுகளின் எண்ணிக்கை மீண்டும் பழையநிலையயை அடைய வாய்ப்புள்ளதாக ஆடு வியார்பாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி: தினகரன்

Due to worst drought goat farming totally decreased in and around Tirumangalam

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top