website loader
×

சிவரக்கோட்டை வனப்பகுதியில் மான் வேட்டையாடியவர்கள் கைது

திருமங்கலம் : திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஒரு புள்ளி மான் அருகில் உள்ள செங்கப்படை கிராமத்துக்கு வந்தது. அப்போது காரில் வந்த 4 மர்ம நபர்கள் அந்த மானை நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்று எடுத்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் உசிலம்பட்டி வனச்சரகர் சூரிய நாராயணனுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனவர்கள் கிருஷ்ணமூர்த்தி (எழுமலை), பாண்டியராஜன் (உத்தப்பநாயக்கனூர்), வன காப்பாளர்கள் மனோகரன், சற்குணம் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் மானை வேட்டையாடியது ஒ.ஆலங்குளத்தை சேர்ந்த எபினேசர் (வயது 47), அழகப்பன்நகர் ரூபன் (52), எச்.எம்.எஸ். காலனி சுலைமான் (29), மறவன்குளம் கென்னடி (53) என தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த வனத்துறையினர் துப்பாக்கியையும், கொல்லப்பட்ட மானின் இறைச்சியையும் பறிமுதல் செய்தனர்.
செய்தி: மாலைமலர்

Four men arrested for hunting a deer which is searching for water sources around Sivarakottai

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top