website loader
×

மின்சாரமில்லா தொகுப்பு வீடுகள்: இரவில் விசபூச்சிகள் தொல்லை

திருமங்கலம் : திருமங்கலம் அருகே உள்ளது நேசனேரி ஊராட்சி. இங்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 52 பயனாளிகள் பயன்பெறும் வகையில், இந்திரா நினைவு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. ஒரு வீட்டின் மதிப்பு 1 லட்சத்து 20 ஆயிரம். கடந்தாண்டு இதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சாவி கொடுக்கப்பட்டு குடியேறினர். தண்ணீர் தேவைக்காக மேல்நிலை நீர்தேக்கதொட்டி கட்டப்பட்டுள்ளது. தெருக்களில் இரண்டு பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு, அவைகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

ஆனால், வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாததால், பயனாளிகள் இருட்டில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்த தொகுப்பு வீடுகளுக்கு இரவில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷஜந்துகள் அதிகம் வருகின்றன. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தொகுப்பு வீடுகளுக்கு மின்சார வசதி ஏற்படுத்தி தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: தினகரன்

People in Housing blocks near Nesaneri suffer without proper electricity connection

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top