website loader
×

ரேசன் கடைக்காக 2கிமீ நடக்கும் வேங்கடசமுத்திர மக்கள்

திருமங்கலம்: திருமங்கலம் வேங்கடசமுத்திரம் பகுதி மக்கள் ரேசன் பொருட்கள் வாங்க 2 கிமீ அலைய வேண் டியுள்ளது.

திருமங்கலம் நகராட்சிக்குட்பட்டது வேங்கடசமுத்திரம் எனப்படும் மாம்பட்டி. இப்பகுதி நகராட்சியின் 16வது வார்டில் அமைந்திருந்தாலும் திருமங்கலம் நகரினை விட்டு தள்ளி சுமார் 2கி.மீ தூரம் குண்டாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்த வார்டில் சுமார் 150 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு என ரேசன் கடை தனியாக இல்லை. திருமங்கலம் மீனாட்சியம்மன் கோயிலை யொட்டியுள்ள மின் வாரிய 2ம் எண் கடையில் தான் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்த கடை உசிலம்பட்டி சாலையில் வேங்கடசமுத்திரத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரம் தள்ளி அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் ரேசன் பொருள்களை வாங்க இந்த பகுதி மக்கள் 2 கி.மீ தூரம் அலைய வேண்டியுள்ளது. அதிலும் பல நாட்கள் ரேசனில் பொருள்கள் வினியோகம் இல்லை. இதனால் வீணாக அலையும் நிலை உண்டாவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே தங்களது பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை உடனடியாக திறக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து போது ராஜன் கூறுகையில், ‘‘பகுதி நேர கடை கேட்டு நாங்கள் பலமுறை கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்து விட்டோம். ஆனால் இதுவரை பரிசீலிக்கக்கூட இல்லை. ரேஷன் பொருள் வாங்க விடுப்பு எடுத்து டூவிலரிலோ அல்லது பஸ்சிலோ செல்ல வேண்டியுள்ளது. பொருள்கள் இல்லையெனில் வீண் அலைச்சலாக எங்களின் வேலையும் பாழ்படுகிறது. எங்களின் நிலையை நேரில் அதிகாரிகள் கண் டறிந்து உடனடியாக பகுதி நேர ரேஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
செய்தி: தினகரன்<!--
 

நம் திருமங்கலத்தைப் பற்றின இது போன்ற தகவல்கள் உங்களுக்குத் தெரிந்தால் தயங்காமல் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். தங்கள் பெயருடன் நம் Tirumangalam.com இணையதளத்தில் பதிவிடப்படும். Send ur mail to admin@tirumangalam.com-->

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top