website loader
×

தோப்பூர் அருகே ஆரப்பாளையம் பேருந்து நிலையம் பரிந்துரை

திருமங்கலம்: மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை திருமங்கலம் - திருநகர் இடையே மாற்ற வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட்டன. இதில் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் இடப்பற்றாக்குறை, வசதி குறைவு, நெரிசல் போன்ற காரணங்களால் வேறு இடத்திற்கு மாற்ற மதுரை மாநகராட்சி கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலில் கோச்சடையில் மாநகராட்சியின் நீரேற்று நிலைய பகுதி தேர்வு செய்யப்பட்டது. இந்த இடம் மதுரையின் குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் இடமாதலாலும், வெளியூர் பேருந்துகள் வந்து செல்வதற்கு ஏற்ப அகலமான சாலைகள் இல்லாததாலும் இந்த இடம் உகந்தது அல்ல என முடிவு செய்யப்பட்டது.

பின்னர் மாற்று இடமாக விளாங்குடி பகுதியில் 12 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்குகள் நடப்பதால் இத்திட்டம் உடனே நிறைவேற வாய்ப்பு குறைவு என்கின்றனர் அதிகாரிகள். இந்த இடம் நீங்கலாக இப்பகுதியில் மாநகராட்சி இடங்கள் இல்லாததால் வேறு எந்த பகுதியில் மாற்றுவது அல்லது காத்திருப்பதா என்ற மாநகராட்சியில் குழப்பம் நீடிக்கின்ற நிலையில் மதுரையில் துணைக்கோள் நகரம், ஸ்மார்ட் சிட்டி, எய்ம்ஸ் மருத்துவமனை இவற்றை மையமாக வைத்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை திருமங்கலத்திற்கும் திருநகருக்கும் இடையே மாற்ற வீட்டுவசதி வாரியம் பரிந்துரைத்துள்ளது. இதற்கு அரசிடமிருந்தும் வரவேற்பும், அதிக நிதி உதவிகளும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
Madurai Corporation officials are suggested the place inbetween Tirumangalam and Thirunagar for the shifting of Arapalayam Mofussil Bus Terminal.

செய்தி: தினமலர் நாளிதழ்.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top