website loader
×

திருமங்கலத்தில் புதுப்பிக்கப்பட்ட உசிலைச் சாலை

திருமங்கலம் : மோசமான நிலையில் இருந்த திருமங்கலத்தின் உசிலம்பட்டிச் சாலை புதுப்பிக்கப்பட்டது.

திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி, சோழவந்தான், திண்டுக்கல், தேனி ஆகிய ஊர்களுக்கு நேரடியாக செல்லவும், திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்துகள் பணிமனைக்குத் திரும்பவும் திருமங்கலத்தின் உசிலம்பட்டி சாலையைத் தான் பயன்படுத்த வேண்டும். இச்சாலை வழியாக நாள் ஒன்றிற்கு நூற்றுக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் பள்ளி, கல்லூரி வாகனங்களும் ஏராளமாக வந்து செல்கின்றது. மேலும் திருமங்கலத்தின் புவி அமைப்புப்படி மழைக் காலங்களின் போது நகரின் வடபகுதிகளான கணபதி நகர், பெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீர் இராஜாஜி தெரு வழியாக வழிந்தோடி உசிலைச் சாலை வந்தடைந்து பின் திலகர் தெரு வழியாக குண்டாற்றை சென்றடையும். அதனால் இச்சாலை ஆண்டுதோறும் சேதம் அடைவது தவிர்க்க முடியாத நிலையில் இருந்தது.

இதனைக் கருத்திற்கொண்டு, குறுகலாக இருந்த இச்சாலையை ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன் அகலப்படுத்தப்பட்டு சாலை போடப்பட்டது. அதன் பின் சேதமடைந்து பெரிதாக பள்ளம் ஏற்படும் போது மட்டும் சீரமைக்கப்பட்டது. தற்போது புதிய சாலை நேற்றிரவு (புதன் கிழமை) போடப்பட்டது.

புதிதாய் அமைக்கப்பட்ட சாலையில் தார் கற்கள் பெயர்ந்து வராமல் தடுக்க சல்லி மண் தூவப்பட வேண்டும். ஆனால் அதனை செய்யாததால் வாகன போக்குவரத்தால் சாலையின் தார் கற்கள் பெயர்ந்து முன் செல்லும் பேருந்து, மகிழுந்து (கார்) ஆகியவற்றின் பின் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளை பதம் பார்க்கிறது. கண்டுகொள்வார்களா நகராட்சி நிர்வாகத்தினர்?



தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top