website loader
×

ஆனந்தா திரையரங்கு - திருமங்கலத்தின் பெருமைமிகு அடையாளம்

திருமங்கலம்: மதுரை தங்கம் திரையரங்கிற்கு அடுத்தாற்போல் 1970கள் வரை தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய திரையரங்கு என பெயர் பெற்றது திருமங்கலத்தின் மையத்தில் உள்ள ஆனந்தா திரையரங்கு


வரலாறு

திருமங்கலத்தில் ஆனந்தா திரையரங்கு, திரு பச்சைக்கண் நாடார் மற்றும் திரு. அனந்தய நாடார் ஆகியோர்களின் முயற்சியால், மாட்டுக் கொட்டகையாய் இருந்த தற்போதைய இடத்தில் 980+ இருக்கைகளுடன் திரையரங்கு கட்டப்பட்டு 1948ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் நாள் (பெரிய கார்த்திகை) அன்று மதுரை பிரபல டாக்டர் வடமலையான் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது (மதுரை தங்கம் திரையரங்கு 1952ல் திறக்கப்பட்டது).

திரையரங்கை கட்டும்போதே முன் பகுதியில் மாட்டு வண்டிக்கென பார்கிங் ஏற்படுத்தப்பட்டது


முதல் படம்

980 இருக்கைகள் இருந்தாலும் அக்காலங்களில் சுமார் 1500+ பேர் வரை அமர்ந்து / படுத்து படம் பார்த்தனர். தரை டிக்கட், பெஞ்ச் மற்றும் சேர் என 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு டிக்கட் விலை முறையே 10 பைசா, 20 பைசா, 30 பைசா என இருந்தது. திரையரங்கு ஆரம்பிக்கப்பட்டு ஓடிய முதல் படம் திரு. SS வாசன் அவர்களின் இயக்கத்தில் ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் (தயாரித்த முதல் படம்) வெளிவந்த சந்திரலேகா (இந்தியாவின் முதல் பெரிய பட்ஜெட் படம், ஏறத்தாழ 200 நாட்களுக்கு மேல் ஓடியது). மேலும் பராசக்தி, மனோகரா, நாடோடி மன்னன் ஆகிய படங்களும் ஏறத்தாழ 175 நாட்கள் ஓடியது.

அக்காலத்தில் திருமங்கலத்தின் முதல் பெரிய கட்டிடமாதலால், திருமங்கலம் மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து பார்த்தால் திரையரங்கு பளிச்சிடுமாம்!!

திருமங்கலம் பேருந்து நிலையமும் திரையரங்கிற்கு அருகிலேயே இருந்ததால் மக்களுக்கு மேலும் வசதியாய் அமைந்தது. (தற்போதைய பி.கே.என். மெட்ரிக் பள்ளி தான் அப்போதைய திருமங்கலம் பேருந்து நிலையம்). அன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு சாதனங்கள் ஏதும் இல்லாத நிலையில் திருமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 300 கிராமங்களில் இருந்து இங்கு படம் பார்க்க வந்தனர். காலப்போக்கில் பச்சைக்கண் நாடார் மற்றும் அனந்தய நாடார் அவர்களின் வாரிசுகள் இத்திரையரங்கை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். 980+ இருந்த இருக்கைகள் 761ஆக குறைக்கப்பட்டது.

கடந்த 2014ம் ஆண்டு திசம்பர் மாதம் சென்னையில் நடந்த பன்னாட்டுத் திரைப்படத் திருவிழாவில் (Chennai International Film Festival 2014), தென் தமிழகத்தின் மிகப்பழமையான திரையரங்கு என்ற வரிசையில், திருமங்கலம் ஆனந்தா திரையரங்கு காட்சிப்படுத்தப்பட்டது. .

  • ஆரம்பிக்கப்பட்ட நாள்: 16. 11. 1948 (பெரிய கார்த்திகை)
  • தோற்றுவித்தவர்கள்: பச்சைக்கண் நாடார் & அனந்தய நாடார்
  • திரையிட்ட முதல் படம்: சந்திரலேகா
  • மொத்த இருக்கைகள்: 980+ (தற்போது 761)
Ananda theatre suited in Tirumangalam is one of the oldest and largest theatres in Tamil Nadu. And was honoured in Chennai International Film Festival 2014.








தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top