website loader
×

மின் இணைப்பு இல்லாததால் திறக்கப்படாத அரசு கலைக் கல்லூரி

திருமங்கலம் : திருமங்கலத்தில் கட்டப்பட்டுள்ள மதுரை காமராஜர் உறுப்புக்கல்லூரி புதிய கட்டிட வளாகத்தில் டிரான்ஸ்பார்மர் இருப்பதால், மின் இணைப்பு கொடுக்க மின் வாரியம் தயங்குகிறது. இதனால், கட்டிட திறப்பு தள்ளிப் போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருமங்கலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், கடந்த 2012ல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி தொடங்கப்பட்டது. இங்கு பிஏ தமிழ், ஆங்கிலம், பிஎஸ்சி கணிதம் மற்றும் பிகாம் என நான்கு பாடப்பிரிவுகள் நடத்தப்படுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 30 பேராசிரியர்கள், பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 5 ஆண்டுகளை கடந்த 6வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உறுப்புக்கல்லூரி இட நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால், திருமங்கலம் - மதுரை நான்குவழிச் சாலையில், கப்பலூர் பழைய கோழிப் பண்ணை அலுவலகத்தில், சகல வசதிகளுடன் உறுப்புக் கல்லூரிக்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கட்டுமானப்பணி முடிந்து ஓராண்டாகி விட்டது. ஆனால், கட்டிட வளாகத்தில் உள்ள டிரான்பார்மர் இருப்பதால், மின் இணைப்பு கொடுக்க மின்வாரியம் மறுக்கிறது. இதனால், உறுப்புக்கல்லூரியை இங்கு கொண்டு வருவதற்கு, தாமதம் ஏற்படுகிறது. கப்பலூர், காந்தி நகர்பகுதிகளின் மின் தேவைக்காக, டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ்பார்மரை வளாகத்தை விட்டு மாற்றி அமைக்க சுமார் 3 லட்சம் செலவாகும். அதனை பல்கலைக்கழகமோ அல்லது கல்லூரி நிர்வாகமோ வழங்க வேண்டும் என மின்வாரியம் கூறுகிறது. இதனால், டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்ய முடியாமல் அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்த பிரச்னையால் திருமங்கலம் காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி இந்தாண்டும், அரசுப் பள்ளி வளாகத்திலேயே இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
செய்தி: தினகரன்.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top