website loader
×

திருமங்கலம் நகராட்சி புதிய அலுவலகத்திற்கு நிதி ஒதுக்கீடு

திருமங்கலம் : திருமங்கலம் நகராட்சி அலுவலகத்திற்கு 2.50 கோடியில் புதிய கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் நகராட்சி முதன்மை நகராட்சியாக திகழ்கிறது. கடந்த 1977ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட இந்த நகரில் தற்போது 27 வார்டுகள் உள்ளன. நகராட்சி அலுவலகம் மதுரை ரோட்டில் கடும் இடநெருக்கடியில் இயங்கி வருகிறது. அலுவலகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு போதுமான இடங்கள் இல்லை. எனவே நகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட அரசிடம் நிதி கோரி பரிந்துரை செய்யப்பட்டது. தமிழக அரசு இதனை ஏற்று திருமங்கலம் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ 2.50 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன்படி தற்போது நகராட்சி அலுவலகம் செயல்படும் கட்டிடத்தின் பின்புறத்தில் உள்ள பழைய கட்டிடத்தினை இடித்து முற்றிலும் நவீனவசதிகளுடன் கூடிய கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இதில் ஆணையாளர், தலைவர் அறைகளில் ஏசி வசதிகள் செய்யப்பட உள்ளன. மேலும் முக்கிய ஆவணங்களை பதிவேடு செய்யும் அறைகளும் முற்றிலும் குளிரூட்ட பகுதிகளாக மாற்றப்பட உள்ளது. பணிகள் விரைவில் துவங்கும் என ஆணையாளர் சரஸ்வதி தெரிவித்தார்.

செய்தி: தினகரன்

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top