website loader
×

நூறாண்டுகளுக்குப் பின் எட்டுப்பட்டறை மாரியம்மன் கோவிலில் குடமுழுக்கு

திருமங்கலம் : திருமங்கலம் எட்டுப்பட்டறை முத்து மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நூறாண்டுகளுக்குப் பின்னர் சிறப்புடன் நடைபெறவுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் சந்தைப்பேட்டை அருகே மீனாட்சி சொக்கநாதர் கோவிலின் தெற்கே குண்டாற்றின் கரையோரம் எட்டுப்பட்டறையில் முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பழம்பெருமை வாய்ந்த இக்கோவிலில் மன்னர்களும் துறைமார்களும் வணங்கி ஆசி பெற்றுள்ளனர். சில தடங்கள்களால் நூறாண்டுகளுக்கும் மேலாக குடமுழுக்கு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் குடமுழுக்கு நடத்த கோவில் நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு மூன்றுநிலை இராஜகோபுரம், அம்பாள் மூலஸ்தான கோபுரம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், புதிய கொடிமரம், திருமதில் மற்றும் பரிவார மூர்த்திகளின் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.  திருப்பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்கு வரும் ஆனி மாதம் 22ஆம் நாள் (சூலை 6, 2017) நடைபெறவுள்ளது.

இதையொட்டி கோவிலின் முன்பாக மகா யாகசாலை அமைக்கப்பட்டு வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் காலை மாலை என இருவேளைகளிலும் பல்வேறு யாகங்கள், பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து 6ம் தேதி காலை 5.30 மணிக்கு மேல் திருமறை பாராயணம், மங்களவாத்தியம், நான்காம் கால யாகசாலை பூஜை, சபர்சாஹத்தி, மஹாபூர்ணாஹத்தியுடன் கலசம் புறப்பாடு நடைபெறுகிறது. பின்னர் காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் அம்பாள் விமானம், இராஜகோபுரம், கொடிமரம் மற்றும் அம்பாள், பரிவார மூர்த்திகள் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்று மஹாதீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் கோவிலின் அருகிலுள்ள புல்பேட்டையில் கும்பாபிஷேகத்தில் கலந்து கௌள்ளும் பொதுமக்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.

பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்கவுள்ள இந்த மஹாகும்பாபிஷேக விழாவில் தமிழக வருவாய்துறை அமைச்சர், கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், பி.நீதிபதி, பெரியபுள்ளான்(எ) செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். இந்த மஹாகும்பாபிஷேக விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள திருக்கோவில் தலைவர் ஜே.டி.விஜயன், திருமங்கலம் பாண்டியகுல க்ஷத்திரிய நாடார்கள் உறவின்முறை தர்மகர்த்தா ரமேஷ்பாபு நாடார் மற்றும் கோவில்களின் நிர்வாக கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை செங்குளம் கிராம ஐந்து பங்காளிகள் மற்றும் கிராம பொதுமக்கள்,வேங்கடசமுத்திரம் (மாம்பட்டி) பொதுமக்கள் மற்றும் ஆயக்கட்டு தொழிலாளர்கள், குதிரைசாரிகுளம், பழனியாபுரம் பொதுமக்கள் மற்றும் பங்காளிகள், தெற்கு வட்டார பொதுமக்கள் மற்றும் பங்காளிகள் மற்றும் திருமங்கலம் நகர பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top