website loader
×

இடநெருக்கடியால் உயிர்ப்பலி வாங்கிய திருமங்கலம் பேருந்து நிலையம்

திருமங்கலம் : திருமங்கலம் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் அதி வேகமாக வந்த தனியார் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியதில் மனைவி கண் எதிரேயே கணவர் உயிரிழந்தார்.

திருமங்கலம் பேருந்து நிலையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் பகுதி மற்றும் பேருந்துகள் வெளியேறும் பகுதிகளில் பேருந்துகள் வரிசையாக நிறுத்திக் கொள்வதால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதே போல் நேற்று பேருந்து நிலைய நுழைவு பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

மதுரை விளாச்சேரியை சேர்ந்தவர் சந்திரன் (60) மெக்கானிக். மனைவி ஜோதி (58). கணவன், மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளனர். திருமங்கலம் பேருந்து நிலையத்தில் நகர்ப் பேருந்துகள் உள்ளே செல்லும் பகுதி அருகே சந்திரன் வந்தபோது குறுக்கே திடீரென வந்த வாகனத்தினால் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது தேனியிலிருந்து அருப்புக்கோட்டைக்கு செல்லும் தனியார் பேருந்து அதிவேகமாக பேருந்து நிலையத்திற்குள் நுழைய முயன்ற போது சந்திரன் ஓட்டி வந்த வாகனத்தில் மோதி இழுத்து சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே சந்திரன் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

இவரது மனைவி ஜோதி கால்களில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து திருமங்கலம் நகர் காவல்துறையினர், தப்பியோடிய பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

செய்தி : தினகரன்

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top