website loader
×

குண்டாற்றங்கரையில் பலவகை மரக்கன்றுகள் நட அரசு திட்டம்

திருமங்கலம் : குண்டாற்றங்கரையில் 24 கி.மீ., தூரத்திற்கு இருபுறமும் பனை, வேப்பமரக்கன்றுகள் நட பொதுப்பணித்துறை ஏற்பாடுகளை செய்து வருகிறது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
குண்டாறு துார்வாரும் பணி 3.5 கோடி ரூபாய் செலவில் 12.5 கி.மீ., தூரம் தூர்வாரும் பணி நடக்கிறது. இப்பணிகளை அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கணேசன், உதவி கோட்ட செயற்பொறியாளர் லீலாவதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அமைச்சர் கூறியதாவது: குண்டாறு முதன் முறையாக தூர்வாரப்படுகிறது. இதன் மூலம் மைக்குடி, உலகாரி, கல்லணை, கரிசல்குளம், மேலஉப்பிலிக்குண்டு, கொக்குளம்,, கூடக்கோவில், கம்பிக்குடி கண்மாய்கள் பலன் பெறும். மேலக்கோட்டை, மைக்குடி, கல்லணை, கம்பிக்குடி அணைக்கட்டுகள் மூலம் 3,148 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். குண்டாறு துார்வாரப்பட்ட பின்னர் கரை 6 மீட்டர் உயரம், 4 மீட்டர் அகலத்தில் உள்ளது.
இதுவரை 24 கி.மீ., துாரம் துார்வாரும் பணி முடிவு பெறும். இரு கரைகளும் சேர்ந்து 48 கி.மீ., துாரம் 4 மீட்டர் அகலத்தில் சீரமைக்கப்படும். இந்த கரைகளில் பொதுப்பணித்துறை மூலம் பனைமரக்கன்றுகள், வேப்பமரக்கன்றுகள் நடப்படும். தற்போது கன்றுகள் தயாரிப்பு பணி நடக்கிறது, என்றார்

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top