website loader
×

தொடர்மழையால் வெள்ளப் பெருக்கெடுத்த குண்டாறு

திருமங்கலம்: தூர் வாரப்படும் குண்டாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அருகே போத்தம்பட்டி, கருக்காட்டான்பட்டி பகுதியில் உற்பத்தியாகும் குண்டாறு, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. ஆறு உற்பத்தியாகும் இடத்திலிருந்து திருமங்கலம் சாத்தங்குடி வரையில் ஓடையாகவும், அதன்பின்பு ஆறாக உருமாறி ஓடுகிறது. இந்த குண்டாறு திருமங்கலம் நகரின் பல்வேறு வழிகளில் செல்கிறது. இதில் இருந்த ஏராளமான ஆக்கிரமைப்புகளால் குண்டாறு தனது பொழிவினை இழந்து கூவமாக மாறியதால் விவசாயிகள் வேதனையடைந்தனர். ஆற்றினை தூர்வாரவேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் தொடர் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு சாத்தங்குடியிலிருந்து மேலக்கோட்டை வரையில் 12 கி.மீ தூரத்திற்கு முதற் கட்டமாக குண்டாற்றினை தூர்வரும் பணியை செய்தது. இரண்டாம் கட்டமாக ஆற்றினை தூர்வாரும் நடவடிக்கையை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர். தொகுதி அமைச்சர் உதயகுமார் ரூ 3.36 கோடியை இரண்டாம் கட்ட தூர்வாரும் பணிக்காக ஒதுக்கினார். கடந்த 15 தினங்களுக்கு முன்பு இரண்டாம் கட்டமாக மேலக்கோட்டையிலிருந்து கம்பிக்குடிவரையில் 12 கி.மீ குண்டாறு தூர்வாரும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து தூர் வாரிய குண்டாற்றில் வெள்ளமாக மழைநீர் ஓடத் துவங்கியுள்ளது.

வடகரை மற்றும் மைக்குடி அருகே இருபுறத்தின் கரைகளையும் தொட்டு பாய்ந்து ஓடும் குண்டாற்றினை ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் நேரில் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தால் திருமங்கலம் பகுதியில் விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குண்டாறு கடலில் கலக்கும் ராமநாதபுரம் மாவட்டம் வரையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த ஆற்றினை தூர் வாரினால் மதுரை விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் விவசாயம் செழிக்கும் நிலை உருவாகும்.  

வாடிப்பட்டி கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக அளவு மழை பெய்ததால், வாடிப்பட்டி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்பகுதிகளில் கடந்த 2ஆண்டுகளாக போதிய மழை இல்லை. இதனால் விளை நிலங்களை தரிசாக மாறியது.அத்துடன் போதிய மழையில்லாததால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென இப்பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக தமிழகத்திலேயே அதிகப்படியாக ஆண்டிபட்டி கிராமத்தில் ஒரே நாளில் 15செ.மீ அளவு மழை பெய்திருந்தது. சுமார் 2 மணிநேரம் பெய்த மழையால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நன்றி: தினகரன்



தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top