website loader
×

அடிப்படை வசதிகள் இல்லாமல் திருமங்கலம் தீயணைப்பு நிலையம்

திருமங்கலம்: திருமங்கலம், கள்ளிக்குடியில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி நீண்ட நாட்களாக தீயணைப்பு நிலையங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.

மதுரை மாவட்டத்தில் திடீர் நகர், தல்லாகுளம் திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி, கொட்டாம்பட்டி, டி.கல்லுப்பட்டி, சோழவந்தான், கள்ளிக்குடி உள்ளிட்ட 9 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இவற்றில் திருமங்கலம் 25 ஆண்டுகளுக்கு முன்பும், கள்ளிக்குடியில் 20 ஆண்டுகளுக்கு தீயணைப்பு நிலையங்கள் துவக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த இரண்டு நிலையங்களுக்கும் இதுவரையில் சொந்த கட்டிடம் இல்லை.

திருமங்கலம் நிலையத்தின் எல்லையாக திருநகரில் துவங்கி நேசனேரி வரையிலும், 20கி.மீ தூரத்திற்கு விரிந்துள்ளது. மேலும் கப்பலூர் தொழிற்பேட்டை, ஐஓசி நிறுவனங்கள் அனைத்தும் இந்த நிலையத்தின் எல்லைக்குள் வருகின்றன. திருமங்கலம் நிலையத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய தீயணைப்பு வாகனம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டாலும் நிலையம் இடநெருக்கடியுடன் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டுவருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தீயணைப்பு வாகனத்தினை ஆய்வு செய்ய வரும் தென்மண்டல அதிகாரி வரும்போது வாகனத்தினை பரிசோதனை செய்ய ஓமியோபதி கல்லூரி மைதானத்திற்கு வண்டி கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யும் நிலையில் தீயணைப்பு நிலைய கட்டிடம் உள்ளது. மேலும் ஊழியர்களுக்கு ஓய்வறைகள் கிடையாது. வாகனத்திற்கான தண்ணீர் பிடிக்க 3 கி.மீ தூரம் செல்ல வேண்டியுள்ளது. இடநெருக்கடியில் பணியாளர்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது. கழிப்பறை வசதி கூட இல்லை.

இதேபோல் கள்ளிக்குடியில் உள்ள தீயணைப்பு நிலையமும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு தீயணைப்பு வண்டி நிற்கும் இடம் ஏதோ குடோன் போல் காட்சியளிக்கிறது. இங்கும் வாகனத்திற்கு தண்ணீர் பிடிக்க பல கி.மீ தூரத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. ஊழியர்கள் இடப்பாற்றாக்குறையுடன் கூடிய அறையில் பணியாற்றி வருகின்றனர்.

இரண்டு தீயணைப்பு நிலையமும் வாடகை கட்டிடத்தில் செயல்படுவதால் அரசுக்கு வருவாய் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இடங்கள் இருந்தும் அங்கு தீயணைப்பு நிலையங்கள் சொந்த கட்டிடங்கள் கட்டப்படாததால் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் திருமங்கலம், கள்ளிக்குடி தீயணைப்பு நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
செய்தி : தினகரன்



தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top