website loader
×

மேம்பால பணியால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு 2 கோடியில் கட்டிடம்

திருமங்கலம் : திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (யூனியன் ஆபீஸ்) தற்போது தேவர் சிலை அருகே நகரின் மையப்பகுதியில் உள்ளது. அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. மேம்பாலம் அமைந்தால் இருபுறமும் சர்வீஸ் ரோடு வரும். அந்த இடத்தில் தற்போதுள்ள ஒன்றிய அலுவலகம் வருவதால் அலுவலகத்தின் பெரும்பாலான கட்டிங்கள் இடிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய இடத்தைத் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நகருக்குள் ஒன்றிய அலுவலகம் அமையும் வகையில் போதுமான இடமில்லாத நிலையில் உச்சப்பட்டி ஊராட்சிக்குச் சொந்தமான 2 ஏக்கர் இடத்தை அதிகாரிகள் தற்போது தேர்வு செய்துள்ளனர்.

திருமங்கலம்- மதுரை நான்குவழிச்சாலையில் கப்பலூரில் புதிதாக அமைந்துள்ள காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிக்கு அருகே உள்ள 2 ஏக்கர் இடத்தை தேர்வு செய்தனர். அந்த இடத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்கலாம் என முடிவு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். ரூ.2 கோடி மதிப்பீட்டில் பிரமாண்ட கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்ததும் பூர்வாங்கப் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தி: தினகரன்

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top