website loader
×

டெங்குக் காய்ச்சலிற்கு திருமங்கலம் மாணவர் பலி

திருமங்கலம்: திருமங்கலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

திருமங்கலம் ஜவஹர் நகர் 8-ஆவது தெருவைச் சேர்ந்தவர் நாகேந்திரன். திருமங்கலத்தில் பழக்கமிசன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் நாகபிரஜித் (13). இவர் நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 15 நாள்களுக்கு முன் நாகபிரஜித் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து திருமங்கலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

ஆனால் காய்ச்சல் குணமாகாததையடுத்து கடந்த 3 நாள்களுக்கு முன் அவருக்கு ரத்தப் பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் நாகபிரஜித்துக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நாகபிரஜித் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
செய்தி: தினமணி



தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top