website loader
×

தமிழகத்தில் முதன்முறையாக பிகேஎன் பள்ளியில் அரசின் நவீன ஆய்வகம்

திருமங்கலம்: தமிழ்நாட்டிலே முதல் முறையாக அரசின் நிதியுதவியுடன் ரூ.20 இலட்சம் செலவில் அரசு உதவிபெறும் பள்ளியான திருமங்கலம் பி.கே.என் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அடல் டிங்கரிங் அதிநவீன ஆய்வகத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

பள்ளி மாணவ, மாணவியரின் புதுமையான கண்டுபிடிப்பு திறனை மேம்படுத்திடும் வகையில் நிதிஆயோக் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிநவீன அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்நாட்டிலே முதலாவதாகவும்,மதுரை மாவட்டத்தில் முதன்மையானதாகவும் திருமங்கலம் பி.கே.என் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.20 இலட்சம் செலவில் அடல் டிங்கரிங் ஆய்வகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தின் திறப்புவிழா நேற்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் செயலாளர் ஜெ. பார்த்திபன் தலைமை வகித்தார். தலைவர் ஜெ. மோகன், பொருளாளர் எஸ். நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட இவ்விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பி.கே.என் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.20 இலட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன அடல் டிங்கரிங் ஆய்வகத்தை (Atal Tinkering Lab) திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் ஆய்வகத்தை சுற்றிப்பார்த்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பள்ளிமாணவிகளின் புதிய கண்டுபிடிப்புகளை நேரில் பார்வையிட்டு அவர்களை பாராட்டினார்.

இந்த விழாவில் மதுரை மாவட்ட கலெக்டர் கொ. வீரராகவராவ், முதன்மை கல்வி அதிகாரி மாரிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ., கே. தமிழரசன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட கழக துணைச் செயலாளர் ஐயப்பன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம், திருப்பதி, திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி. விஜயன், முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன், திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி, திருமங்கலம் நகர் அவைத்தலைவர் ஜஹாங்கீர், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் சதீஸ்சண்முகம், திருமங்கலம் ஒன்றிய துணை செயலாளர் சுகுமார், திருமங்கலம் தாசில்தார் நாகரத்தினம், உதவி செயற் பொறியாளர் லீலாவதி, பி.கே.என் உறவின்முறை நாட்டாண்மைகள் பூமிநாதன், திருஞானம், சுரேஷ்கண்ணா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவில் தலைமை ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.
செய்தி & படம்: தினபூமி
 

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top