website loader
×

திருமங்கலம் கள்ளிக்குடி அருகே காட்டாற்றில் அதிகளவு மணல் திருட்டு

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ள மாசவநத்தம் கிராமப் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சாப்டூர் சதுரகிரி மலைப் பகுதிகளில் மழை பெய்திடும் சமயத்தில் காட்டாறு பெருகி கமண்டல நதியாக மாறி திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை வழியாக குண்டாற்றில் இணைந்து கடலில் கலந்து விடுகிறது. தற்போது கள்ளிக்குடி ஒன்றியம் மாசவநத்தம் பகுதியில் இந்த ஆற்றுப் படுகையின் கீழும் சில பட்டா நிலங்களின் அடியிலும் தரமான மணல் கிடைத்து வருகிறது. தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆற்று மணலுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மாசவநத்தம் பகுதியிலுள்ள ஆற்றுப்படுகை மற்றும் தனியார் பட்டா இடங்களில் உள்ள மணலை நள்ளிரவில் திருட்டுத்தனமாக அள்ளி அதிகவிலைக்கு தென் மாவட்டங்களில் விற்பனை செய்திடும் நிகழ்வு அதிகரித்து வருகிறது.

நள்ளிரவில் விருதுநகர் மாவட்ட எல்லைக்கு மிகவும் அருகிலுள்ள மாசவநத்தம் மாந்தோப்பு கண்மாய் கரைப் பகுதியில் அதிநவீன இயந்திரங்களை கொண்டு மணல் திருடும் நிகழ்வுகளும் அதனை 10 சக்கரம் கொண்ட டாரஸ் லாரிகளில் ஏற்றி நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கடத்திடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆள்நடமாட்டம் இல்லாத பேய்க்குளம் வழியாக இந்த மணல் கடத்தல் லாரிகள் இயக்கப்படுவதால் வெளி உலகிற்கு தெரியாமல் போய் விடுகிறது.
குறிப்பாக போலீஸ் நடமாட்டம் இல்லாத நாட்களையே இந்த மணல் கடத்தல் கும்பல் தேர்வு செய்து தனது அட்டகாசத்தை ஆரம்பிக்கிறது. எடுத்துக்காட்டிற்கு ஜல்லிக்கட்டு திருவிழா,கோவில் விழாக்கள்,முக்கிய பிரமுகர்கள் வருகை மற்றும் பிற இடங்களில் எற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை போன்றவற்றுக்கு அதிகளவு போலீசார் சென்றுவிடும் சமயத்தில் மாசவநத்தம் பகுதியில் மணல் திருட்டு உச்சகட்டத்தை எட்டி விடுகிறதாம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாசவநத்தம் பகுதியிலிருந்து மணல் கடத்தி வந்த இரண்டு லாரிகளை மடக்கிப்பிடித்த வருவாய் துறையினர் அவற்றை கள்ளிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மணல் கடத்தலில் ஈடுபடுவோர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை இணைந்து திருமங்கலம் பகுதியில் மணல் கடத்தல் தடுப்பு பிரிவினை ஏற்படுத்தி அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தி & படம்: தினபூமி
 

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top