website loader
×

மதுரை மாவட்டத்தின் முதல் பன்னீர் சோடா தயாரித்த திருமங்கலம் வீனஸ் சோடா

திருமங்கலம்: மதுரை மாவட்டத்தில் பொன்விழா கண்டு தலைமுறை தாண்டி இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே கோலி சோடா நிறுவனம் நம்ம திருமங்கலம் வீனஸ் சோடா கம்பெனி என்பது எதனை பேருக்குத் தெரியும்? தெரிந்து கொள்ளுங்கள்.


சோடா கம்பெனி

திருமங்கலத்தில் ஆர். ஜெயமணி அவர்களின் முயற்சியால் தனது மாமாவின் சோடா கம்பெனியில் அனுபவம் பெற்று திருமங்கலத்தில் ஒரு சோடா கம்பெனியை ஆரம்பிக்கும் எண்ணம் தோன்றியது. அதற்காக தனது மனைவி திருமணத்திற்கு சீதனமாக கொண்டு வந்த 60 பவுன் நகை மற்றும் வீட்டிலுள்ள ஆடு மாடு கோழி என அனைத்தையும் விற்று 1957ம் ஆண்டு சூலை மாதம் 7ம் நாள் ரூ.2000 முதலீடாகக் கொண்டு வீனஸ் சோடா கம்பெனி என்ற ஒரு சிறு தொழிலாக திருமங்கலம் திருவள்ளுவர் தெருவில் செட்டியார் காம்பவுன்டில் ஆரம்பித்தார். ஆரம்ப காலத்தில் வெறும் கோலி சோடா மட்டும் தயாரிக்கப்பட்டு 1 சோடா, 1 அனாவிற்கு (6 காசுகள்) விற்கப்பட்டது. சோடாவின் தரத்தால், மக்கள் மத்தியில் வீனஸ் சோடா நற்பெயர் எடுக்க ஆரம்பித்தது.


அக்காலங்களில் 1 சோடா தயாரிக்க கைச்சுற்று இயந்திரத்தில் 60 முறை சுற்றினால் தான் தரமான சோடா கிடைக்கும்


முதல் கலர் (குளிர்பானம்)

சோடாவின் தரம் மற்றும் மக்களின் பேராதரவினால் அடுத்த மூன்றாவது ஆண்டில் அதாவது 1960ல் குளிர்பானம் (கலர்) தயாரிக்க ஆரம்பித்தார். நிறுவனம் பெரிய அளவில் மாறியது. திருமங்கலம் நகருக்குள் திருமங்கலம் தாலுகாவின் அனேக பகுதிகளில் வீனஸ் சோடா மற்றும் கலர் விற்பனை செய்யப்பட்டது. அன்றைய காலக்கட்டத்தில் திருமங்கலம் சுற்றுவட்டாரத்தில் இருந்து பால் வண்டிகள் ஏராளமாக திருமங்கலத்திலுள்ள பால் பண்ணைகளுக்கு வந்து செல்வதுண்டு. திருபிச் செல்லும்போது காலியாக செல்லும் வண்டிகளில் அந்தந்த கிராமங்களுக்கு வீனஸ் சோடா விற்பனை செய்யப்பட்டது. 1980களில் வீனஸ் சோடா கம்பெனி மேலும் விரிவடைந்து மதுரை மாவட்டம் முழுக்க விற்பனை செய்யப்பட்டது.


குளிர்பானங்களுக்கு வேதிப் பொருட்கள் கலக்காமல் இன்று வரை இயற்கையாக தயாரிக்கப்படுகின்றது


மதுரை மாவட்டத்தின் முதல் பன்னீர் சோடா

வீனஸ் சோடா நிறுவனம் பெரிய அளவில் வளர்ந்ததால் அடுத்தகட்டமாக பன்னீர் சோடாவை தயாரிக்க திட்டமிட்டார். திட்டமிட்டபடியே 1990ல் வீனஸ் சோடாவில் ஓர் அங்கமாக மதுரை மாவட்டத்திலேயே முதல் முதலாக பன்னீர் சோடா தயாரித்து விற்பனை செய்தார். இதற்கும் மக்கள் பேராதரவு தந்தனர். நன்கு வளர்ந்து கொண்டிருந்த வீனஸ் சோடா கம்பெனி முதன்முறையாக 2000ம் ஆண்டின் தொடக்கத்தில் முதல் சரிவு காண ஆரம்பித்தது - காரணம் "திருமங்கலத்தில் நிலவிய தண்ணீர் பஞ்சம்". சோடா உற்பத்தியும் விற்பனையும் குறைந்தது. ஒரு நாளிற்கு 400ஆக இருந்த சோடா உற்பத்தி 40ஆக குறைந்தது. இதனால் மக்களின் மனம் கொக்கக்கோலா பெப்சி போன்று வெளிநாட்டுக் குளிர்பானமத்தின் மீது திரும்பியது. திருமங்கலத்தில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்த பின்பும் மக்கள் வெளிநாட்டுக் குளிர்பானங்கள் மீது மோகம் கொண்டிருந்தமையால் அதனையே பருக தொடங்கினர். சரிவைக் கண்டாலும் திரு.ஜெயமணி அவர்கள் இன்றும் வீனஸ் சோடாவை நடத்தி வருகிறார். பாரம்பரியமிக்க சோடாவை இன்றும் சுவைக்கின்றனர்.

Madurai district's first corbonated rosewater soda was prepared by Thirumangalam Venus Soda Company





தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top