website loader
×

கல்விக்காக தன்னையே அர்பணித்த தலைமை ஆசிரியர் திரு. அருணாசலம்

திருமங்கலம்: காமராசர் முதலைச்சராக பொறுப்பேற்றதும் தமிழகத்தில் புதிய கல்விமுறையைக் அமைக்க ஐவர் கமிட்டியை உருவாக்கினார். அதில் ஒருவரான நம் பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலையாசிரியர் திரு. மா. அருணாசலம் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

திரு. மா. அருணாசலம் அவர்கள், 1912ம் ஆண்டு அக்டோபர் 14ம் நாள் மாரியப்ப நாடார் பூவாயியம்மாள் ஆகியோருக்கு மகனாக விருதுநகரில் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை விருதுநகர் கே. வி. எஸ் பள்ளியிலும் பட்டப் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், Literature of Teaching படிப்பை செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் முடித்து பொருளியல் துறையின் பட்ட மேற்படிப்பில் சென்னை மாகாண அளவில் இரண்டாமிடம் பெற்றார். பின்னர் இந்தியக் குடிமைப் பணியில் (Indian Civil Service) தேர்வானார். ஆனால் அவர் படித்த விருதுநகர் கே. வி. எஸ். பள்ளியில் உதவி தலைமையாசிரியர் பணி கிடைக்கவே அங்கு மாற்றலானார்.

கே.வி.எஸ். பள்ளியில் உதவி தலைமையாசிரியராய் பணிபுரிந்து பின்னர் 1941ம் ஆண்டு திருமங்கலம் பி. கே. என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்று ஏறத்தாழ 31 ஆண்டுகாலம் பணிபுரிந்தார். இவரால் அப்பள்ளியில் 4ம் பாரம் வகுப்பு முதல் எல்லா மாணவர்களுக்கும் ரென் அண்டு மார்ட்டின் ஆங்கில அகராதி பயிற்சியளிக்கப்பட்டது. காந்தி பிறந்தநாளான 1956ம் ஆண்டு அக்டோபர் 2ம் நாள் மாணவர்களுக்கு பிடி அரிசித் திட்டம் (மதிய உணவுத்திட்டம்) தொடங்கப்பட்டது. இவரால் ஆரம்பிக்கப்பட்ட பிடி அரிசித் திட்டத்தை மேற்பார்வையிட ஒரிசா மாநில அமைச்சர் 1958ம் ஆண்டு இப்பள்ளிக்கு வந்தார். 1959ம் ஆண்டு பிப்ரவரி 22ம் நாள் பள்ளியின் 50ம் ஆண்டு பொன்விழாவில் அப்போதைய தமிழக முதலமைச்சர் திரு. கு. காமராசரைப் பங்கேற்கவைத்தார். பள்ளியின் முதல் சாரணர் சாரணியர் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். 1962ம் ஆண்டு பள்ளியில் இலவசக் கல்வி முறையைக் கொண்டு வந்தார்.

அலுவலகப் பணி

  • காமராசர் முதலைச்சராக பொறுப்பேற்றதும் தமிழகத்தில் புதிய கல்விமுறையை அமைக்க ஐவர் கமிட்டியை உருவாக்கினார். அதில் அருணாசலமும் ஒருவர். (ஆதாரத்திற்கு இந்தத் இணைப்பில் 6ம் பக்கம் பார்க்க)
  • 1952ம் ஆண்டில், மத்திய அரசு உயர்கல்வித் துறையின் உறுப்பினர்
  • தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் உறுப்பினர்
  • தமிழக அரசு கல்வியாளர் குழு உறுப்பினர்
  • தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் உறுப்பினர்
  • மதுரை மாவட்ட சாரணர் இயக்க ஆய்வாளர் (Commissioner of Scouts)

இவரது ஆசிரியப் பணியை போற்றி தேசிய நல்லாசிரியர் விருதை அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. இராஜேந்திர பிரசாத் அவர்கள் கைகளில் பெற்றார்.
தகவல் & படம்: பி.கே.என் பள்ளியின் நூற்றாண்டு விழா மலர்

Thirumangalam PKN Boys High School's former Head master Mr. M. Arunachalam was awarded as Best Teacher award by Indian Government





தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top