website loader
×

திருமங்கலத்தில் இரயில்வே பாலம் அமைக்க அரசிடம் எம்.எல்.ஏ கோரிக்கை

திருமங்கலம்: திருமங்கலத்தில் இரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என எம். எல். ஏ சட்டமன்றத்தில் வேண்டுகோள்.

திருமங்கலம் நகரின் மையப்பகுதியில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் ஆறுமுக சாலையின் வழியில் ஒரு இரயில்வே கேட் உள்ளது. அதனைக் கடந்து தான் திருமங்கலத்தில் இருந்து ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்ல முடியும். மருத்துவமனை, கல்வி என எந்தவொரு காரியங்களுக்கும் திருமங்கலத்தை நம்பியுள்ள அந்த கிராமங்கள் இந்தக் இரயில்வே கதவைக் கடந்து தான் செல்ல முடியும். திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட ஏறத்தாழ 30 விழுக்காட்டு மக்கள் இதனைக் கடந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் மதுரை - நெல்லை இரயில்வே வழித்தடத்தில் ஒரு நாளிற்கு ஏறத்தாழ 20க்கும் மேற்பட்ட தடவை அடைக்கப்படுகின்றது.

திருமங்கலத்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரயில்வே மேம்பாலம் இந்தாண்டு அமைக்கப்படுமா என சட்டமன்றத்தில் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு, முத்துராமலிங்கம் கேள்வி எழுப்பினார். கேள்விக்கு பதிலளித்த மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி, 24 மணி நேரத்தில் இரயில்வே பாதையில் செல்லும் இரயிலின் எண்ணிக்கை மற்றும் கதவு மூடப்படும்போது இரு பக்கங்களிலும் நிற்கின்ற வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கிற்கொண்டு, அந்த புள்ளிவிவரங்கள் ஒரு லட்சம் அலகுகளுக்கு மேல் இருப்பின் அங்கே மேம்பாலம் அமைப்பதற்கு மத்திய அரசு வழங்குகிறது. சட்டமன்ற உறுப்பினர் வழங்கிய ஆய்வறிக்கையில் அந்த இரயில்வே கேட் வழியாக ஒரு லட்சம் அலகுகளுக்கு மேல் வாகனங்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அங்கு மேம்பாலம் அமைக்க அரசு பரிசீலிக்கும் என அவர் கூறினார்.

விரைவில் பரிசீலித்து திருமங்கலம் இரயில்வே கேட்டில் புதிய மேம்பாலம் அமைக்க திருமங்கலத்து வாசிகள் சார்பாக கோருகின்றோம், நம்புகின்றோம்.
செய்தி: மாலைமுரசு

Thirumangalam MLA Muthuramalingam requested Govt for Railway bridge in the Assembly

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top