website loader
×

காமராசரால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரு. என். எஸ். வி. சித்தன்

திருமங்கலம்: 1973ல் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் முதன்முறையாக திரு. என். எஸ். வி. சித்தன் அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளராக முன்மொழிந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் திரு. காமராசர்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1934ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 12ம் நாள் என். எஸ். வீரபத்திரத் தேவருக்கு மகனாகப் பிறந்தார். தனது பள்ளிக் கல்வியை திருமங்கலம் பி. கே. என். பள்ளியில் பயின்று, மதுரைக் கல்லூரியில் பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1959ல் சகுந்தலை என்பவரை திருமணம் முடித்தார். அவரது தகப்பனார், திரு. வீரபத்திரத் தேவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் தீவிரமாக ஈடுபட்டதால், சித்தனுக்கும் காங்., கட்சி மீது நாட்டம் ஏற்படவே கட்சியின் பல்வேறு போராட்டங்களில் பங்குகொண்டார். அதன் விளைவாக 1967ல் தமிழக சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டார். அதில் தன்னோடு போட்டியிட்ட இராஜாஜியின் சுதந்திரக் கட்சி வேட்பாளர் திரு. எம். பி. இராஜன் அவர்களை விட 3,257 வாக்குகள் அதிகம் பெற்று முதல் வெற்றி கண்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தித் திணிப்பை எதிர்க்கும் போராட்டத்தால் தமிழகத்தில் காங்., கட்சியின் செல்வாக்கு சரிவடைந்த (சொந்த ஊரான விருதுபட்டியில் காமராசரை தோற்கடிக்கப்பட்ட) அதே 1967ல் வெற்றி பெற்ற ஒரு சிலருள் இவரும் ஒருவர்.

அதன்பின்னர், 1973ல் தி.மு.கவைச் சேர்ந்த திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. இராஜாங்கம் அவர்களின் மறைவினால், இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது திருமங்கலம், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருவதால் சித்தனை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என எண்ணி காமராசர் இவரை வேட்பாளராக முன்மொழிந்தார். அப்போது தான் எம்.ஜி.ஆரும் தி.மு.க.விலிருந்து பிரிந்து அண்ணா தி,மு.க.வை நிறுவினார். அவரும் தனது முதல் வேட்பாளராக திரு. மாயத்தேவர் அவர்களை போட்டியிட வைத்தார். கட்சி ஆரம்பித்த முதல் தேர்தல் என்பதால் எம்.ஜி.ஆர். ஜெயிக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. வெற்றியும் பெற்றார். தேர்தலில் திரு. என்.எஸ்.வி. சித்தன் அவர்கள் 119032 வாக்குகள் பெற்று, 141898 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

தோல்வியால் துவளாமல் தொடர்ந்து 1980 மற்றும் 1984ம் ஆண்டு தேர்தலில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து 1996 , 2004 மற்றும் 2009 ல் இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Thiru. NSV Chitthan, who was recommended for Dindigul Parliamentary Election 1973 by the former CM Thiru. Kamarasar.

நம் திருமங்கலத்தைப் பற்றின இது போன்ற தகவல்கள் உங்களுக்குத் தெரிந்தால் தயங்காமல் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். தங்கள் பெயருடன் நம் Tirumangalam.com இணையதளத்தில் பதிவிடப்படும். Send ur mail to admin@tirumangalam.com-->

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top