website loader
×

திருமங்கலத்து குண்டாற்றில் கோயில் கொண்டிருக்கும் அனுமார்

திருமங்கலம்: திருமங்கலம் குண்டாற்றின் கரையில் 600 ஆண்டுகாலம் பழமைவாய்ந்த அனுமார் கோயில் பற்றின வரலாற்றை அறிந்து கொள்வோம்.

வடக்கில் சத்திரபதி சிவாஜி ஆட்சிபுரிந்த காலத்தில், தமிழகத்தில் திவான்கள் மூலம் வரி வசூலிக்கப்பட்டதாம். இங்கே திருமங்கலம் சுற்றுவட்டாரத்தில் வரி வசூலித்த திவானுக்கு குழந்தை இல்லாமல் தவித்துவந்தார். ஆகையால் குழந்தை வரம் வேண்டி அனுமரை வழிபடத் துவங்கினார். பின் வேங்கடசமுத்திரம் அருகே குண்டாறு இரண்டாகப் பிரியும் ஓர் அழகான சூழல் நிறைந்த பகுதியில் அனுமாருக்கென கோயில் ஒன்றைக் கட்டினார். பின்னர் அவர் வழிவந்தவர்கள் கிளை மேம்படுத்தியும், பராமரித்தும் வந்தனர். காலப்போக்கில் கோயில் அரசு நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இக்கோயிலின் சன்னதிகளாக வல்லப கணபதி, வள்ளி தெய்வானை சமேத முருகர், மணிகண்டன், கருமாரி அம்மன், துர்கை, லட்சுமி, நரசிம்மர், சீதா, ராம லட்சுமணர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் குழந்தை இல்லாதவர்கள் அனுமாருக்கு 48 நாட்கள் விரதம் இருந்து வெண்ணை சாற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். வடைமாலை, வெற்றிலை மாலை போன்றவைகளும் சிறந்ததாக கூறப்படுகின்றது.

திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் நடைபெறும் அனுமார் ஜெயந்தி வெகு சிறப்பாய் கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அனுமாருக்கு அபிசேகம் நடைபெறும். அன்று மாலை அனுமார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நகர்வால் நடைபெறும். மொத்தம் 5 நாட்கள் நடக்கும் இந்நிகழ்ச்சியில், சிறப்பு பூசைகள் மற்றும் அன்னதானம் நடக்கும்.

About 600 year old Hanumar temple in the river bank of Gundar Thirumangalam

தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top