website loader
×

நூறாண்டு பழமைவாய்ந்த திருமங்கலம் கோர்ட் பிள்ளையார் கோயில்

திருமங்கலம் : ஆங்கிலேயர் காலத்தில் நீதிபதிகள் தீர்ப்பு எழுதும் முன் கும்பிட்ட திருமங்கலம் அருள்மிகு கோர்ட் பிள்ளையார்.

திருமங்கலத்தின் தற்போதைய அரசுப் பொது மருத்துவமனை அந்நாளில் நீதிமன்ற வளாகமாக செயல்பட்டது. ஆங்கிலேயர் கட்டிய நீதிமன்றத்தில் 1900களின் ஆரம்பத்தில் இந்தியர்களை வக்கீல் மற்றும் நீதிபதியாக அமர்த்தியது. அதனால் நீதிமன்ற வளாகத்தில் கிழக்கு நோக்கி பிள்ளையார் ஒன்றை பிரதிஷ்டை செய்தனர். நீதிபதிகள் ஒவ்வொரு வழக்கின் இறுதித் தீர்ப்பு எழுதும் முன்பு இந்த பிள்ளையாரை கும்பிட்ட பின்னர் தான் எழுதினார்களாம். இந்தியா விடுதலை அடைந்த பின்னர் ஆங்கிலேயர் கட்டிய திருமங்கலம் பத்திரப் பதிவு அலுவலகத்தின் ஒரு பகுதியாய் நீதிமன்றம் மாற்றப்பட்டது. பழைய நீதிமன்றம் அரசுப் பொது மருத்துவமனையாக செயல்படத் துவங்கியது. சில ஆண்டுகள் இக்கோயில் மருத்துவமனை வளாகத்தினுள் செயல்பட்டது. பின்னர் 2000ம் ஆண்டு வாக்கில் கோயில் அருகே குறுக்கே சுவர் எழுப்பி கோயில் தனியாக பிரிக்கப்பட்டது. தற்போது இக்கோயிலை ஐயர் பாலசுப்பிரமணியன் அவர்கள் அர்ச்சகராக உள்ளார்.

சிறப்பம்சம்
இக்கோயில் பிள்ளையாருக்கு எருக்கம்பூ மாலை மற்றும் அருகம்புல் மாலை சிறப்பானதாகும். மேலும் நினைத்த காரியம் நடக்கவும் எது வேண்டினாலும் நிறைவேற்றும் பிள்ளையார் திருமங்கலத்தில் இவர் ஒருவரே என அங்கு வந்து தரிசனம் செய்த பக்தர்கள் தெரிவித்தனர்.
கோயில் அர்ச்சகரை தொடர்பு கொள்ள: 97896 43007 & 74181 88895

Thirumangalam court pillaiyaar temple aged more than 100 years






தொடர்புடையவை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate vel, dapibus sit amet lectus. Etiam varius dui eget lorem elementum eget mattis sapien interdum. In hac habitasse platea dictumst. Morbi sed nisi est, vitae convallis nulla. Nunc vestibulum ipsum nec libero sodales dignissim.

Newsletter

SLorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vivamus leo ante, consectetur sit amet vulputate

Back to Top